இடுப்பில் வளையத்தை மாட்டிக் கொண்டு நடிகை ஷிவானி நாராயணன் டான்ஸ் ஆடிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற தொடர்களில் நடித்து பேமஸ் ஆனவர் ஷிவானி. இதையடுத்து பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்ததும் சீரியலுக்கு டாட்டா காட்டிவிட்டு கிளம்பிய ஷிவானி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் 98 நாட்கள் வரை தாக்குப்பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை ஷிவானிக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இதனால் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார் ஷிவானி.
தமிழில் ஷிவானி முதன்முதலில் நடித்த திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்திருந்தார் ஷிவானி. இப்படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தியேட்டரில் அந்த காட்சிகளுக்கு விசில் பறந்தன. அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ளார் ஷிவானி. இதையடுத்து வெற்றி ஹீரோவாக நடித்த பம்பர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ஷிவானி.
இதையும் படியுங்கள்... அவர் ஒரு Lucky Charm போல.. தளபதி விஜயை சந்தித்த பின் மெகா ஹிட் கொடுத்த மூன்று இயக்குனர்கள் - யாருப்பா அவங்க?
சினிமாவை போல் சோசியல் மீடியாவிலும் படு பிசியாக உள்ள ஷிவானி, அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது இடுப்பில் வளையம் ஒன்றை மாட்டிக்கொண்டு அந்த வளையம் கீழே விழாமல் ஆட்டம் போட்டபடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ஹூலா ஹூப் எனப்படும் அதனை செய்தால் உடல் எடையை குறைப்பதற்கு உதவும் என கூறப்படுகிறது.
ஜிம்மில் ஜாலியாக நடிகை ஷிவானி இடுப்பில் வளையத்தை மாட்டிக்கொண்டு ஹூலா ஹூப் செய்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், நல்லா சர்க்கஸ் பண்றமா நீ என கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். சிலரோ அவரது ஹூலா ஹூப் ஆட்டம் அழகாக இருப்பதாக வர்ணித்து வருகின்றனர். சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வரும் ஷிவானியின் இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
இதையும் படியுங்கள்... டார் டாரா கிழிந்து தொங்கும் பாவாடை! 'காவாலா' பாடல் தமன்னா ஸ்கர்ட்டுக்கே டஃப் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்!