இங்குட்டு ஜவான்... அங்குட்டு லியோ; நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கும் 30 தமிழ் படங்கள் - என்னென்ன தெரியுமா?
தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளதால் அதற்கு பயந்து செப்டம்பர் மாதம் மட்டும் 30 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.
leo, Jawan
ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் ரிலீசாகி அதிரிபுதிரியான வெற்றியை ருசித்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ் படங்களின் வரத்து குறைந்து இருந்தது. பாக்ஸ் ஆபிஸில் சுமார் மூன்று வாரங்கள் வசூல் வேட்டை நடத்திய ஜெயிலர் படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. இதனால் கடந்த மாதம் தேங்கிக் கிடந்த படங்களையெல்லாம் இந்த மாதம் ரிலீஸ் செய்துவிடலாம் என்கிற கனவில் இருந்த தயாரிப்பாளர்களுக்கு ஆரம்பத்திலேயே 2 பான் இந்தியா படங்கள் ரிலீஸ் ஆகி பயம் காட்டிவிட்டன.
shah rukh khan
செப்டம்பர் 1-ந் தேதி ரிலீஸான குஷி திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.9.25 கோடி வசூலித்து இருக்கிறது. ஒரே வாரத்தில் குஷி படத்தின் வசூல் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இது இந்திப்படமாக இருந்தாலும், இதில் நடித்தவர்கள் பெரும்பாலும் தமிழ் நடிகர்கள் என்பதால் தமிழ்நாட்டில் ஜவான் திரைப்படம் நேரடி தமிழ் படம் போல் ரிலீஸ் ஆனது.
mark antony
ஜவான் படம் வெளியான நான்கு நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.16 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து அசர வைத்துள்ளது. இப்படி முதல் இரண்டு வாரங்களை பான் இந்தியா படங்கள் ஆக்கிரமித்து விட்டதால், செப்டம்பர் மாதத்தில் இதுவரை 13 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், எஞ்சியுள்ள 2 வாரங்களில் மேலும் 17 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. அதில் முதலாவதாக விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம் திரைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... தளபதி 68 பட ஹீரோயின் சினேகாவா? வெங்கட் பிரபு வெளியிட்ட புகைப்படம்..! ஆனா இந்த ட்விஸ்டை எதிர்பார்களையே பாஸ்!
upcoming movies
இப்படம் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு திரைக்கு வருகிறது. இதனுடன் ஒன்றிரண்டு சிறு பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இதற்கு அடுத்தபடியாக செப்டம்பர் 28-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி வரை தொடர் விடுமுறை வருவதால், அப்போது ஜெயம் ரவியின் இறைவன், ஹரீஷ் கல்யாண் நடித்த பார்க்கிங், சித்தார்த்தின் சித்தா, ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 உள்பட டஜன் கணக்கிலான படங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
leo, Jawan
இப்படி செப்டம்பர் மாதம் இத்தனை படங்கள் போட்டி போட்டு ரிலீஸ் ஆகக் காரணம், விஜய்யின் லியோ திரைப்படம் தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளதால், அதோடு போட்டி போட பயந்து செப்டம்பர் மாதமே எக்கச்சக்கமான படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அதேபோல் அக்டோபர் 6-ந் தேதியிலும் திரிஷாவின் தி ரோடு மற்றும் விஜய் ஆண்டனியின் ரத்தம் ஆகிய படங்கள் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... தலைவர் 171-க்காக காத்திருந்த கமலுக்கு விபூதி அடித்துவிட்டு... கலாநிதி மாறனிடம் ஐக்கியமான ரஜினி - பின்னணி என்ன?