
தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு, அமெரிக்காவில் துவங்கி, சென்னை, புதுச்சேரி, ஹைதராபாத், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில், 'கோட்' படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகிறது. விஜய்க்கு கேரளாவில் அதிக அளவிலான ரசிகர்கள் உள்ள நிலையில், தினம் தோறும் அவரை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வெளியே காத்திருந்து அவரை பார்த்த பின்னரே வீடு திருப்புகின்றனர்.
தளபதி விஜய்யும், ஷூட்டிங்கில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வந்து ரசிகர்கள் முன்பு அட்டனன்ஸ் போட மறப்பதில்லை. மேலும் திருவனந்தபுரத்தில் ஷூட்டிங் ஆரம்பித்த நாள் முதல்... அடிக்கடி விஜய் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும் போது எடுத்து கொண்ட புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
நேற்று தினம் கூட 'கோட்' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், அவர் ரசிகர்கள் மத்தியில் பேசினார். அதுவும் மலையாளத்தில் அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. அந்த வீடியோவில் ’சேச்சி... சேட்டன்மார், நீங்கள் ஓணம் பண்டிகையின் போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பீர்களோ அதே மகிழ்ச்சியை உங்கள் முகத்தில் நான் பார்க்கிறேன், அதை பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் நண்பா, நண்பி மாதிரி நீங்களும் வேற லெவல்’ என கூறி இருந்தார்.
இதை தொடர்ந்து விஜய்யின் மற்றொரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் விஜய்யை பார்க்க மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர்... தளபதியை பார்க்க ஷூட்டிங் ஸ்பாட்டில் காத்திருக்க, விஜய் அந்த ரசிகரை வந்து சந்தித்தது மட்டும் இன்றி,அவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்து கொண்டார். என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.