தமிழகத்தில் தளபதி விஜய் அவர்களுடைய லியோ படத்திற்கான சிறப்பு காட்சிகளுக்கு அண்மையில் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. அக்டோபர் 19ஆம் தேதி காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் தளபதி விஜயின் லியோ திரைப்படம், கேரளா உள்ளிட்ட பிற பல மாநிலங்களில் காலை நான்கு மணி முதல் சிறப்பு காட்சிகள் துவங்கப்பட உள்ளது. இந்நிலையில் லியோ திரைப்படம் கேரளாவில் ஒரு புதிய பிரம்மாண்ட சாதனையை படைத்து உள்ளது. தற்பொழுது வெளியாகி உள்ள தகவலின்படி இன்று கேரளாவில் லியோ திரைப்படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கி உள்ளது.
முன்பதிவு துவங்கிய முதல் நாளே சுமார் மூன்று லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் கேரளா முழுவதும் விற்று தீர்ந்துள்ளது. சுமார் 2263 காட்சிகள் கேரளாவில் முதல் நாளில் திரையிடப்பட உள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த சூழலில் லியோ திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே சுமார் 5.4 கோடி ரூபாய் ஈட்டி உள்ளதாகவும், விரைவில் இது ரஜினிகாந்தின் ஜெயிலர் முதல் நாள் வசூலை முறியடிக்கும் என்றும் கூறப்படுகிறது. கேரளாவில் ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் சுமார் 5.85 கோடியை வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Humongous day 1, advance booking at Box-Office! day 1 pre-sales crossed ₹’5.4 crores gross collection from 2263 shows available online - 350000+ tickets SOLD till now!
Will surpass this year's HIGHEST KERALA GROSSER day one soon (₹ 5.85… pic.twitter.com/OOSxPXolLA
அதேபோல யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கேரளாவில் சுமார் 7.30 கோடி ரூபாய் ஒரே நாளில் வசூல் செய்துள்ள நிலையில், லியோ திரைப்படம் வெளியாக இன்னும் நான்கு நாட்கள் இருப்பதால் கேஜிஎஃப் 2 சாதனையையும் லியோ முறியடிக்கும் என்று கருதப்படுகிறது. கேரளாவில் தளபதி விஜய் அவர்களுக்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.