தமிழ் சினிமாவின் முன்னணி நடச்சித்திரமான தளபதி விஜய் நடிப்பில், வருகின்ற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் லியோ. பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த திரைப்படம் வெகு பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இரண்டாவது முறையாக தளபதி விஜய் அவர்கள் இணைந்து பணியாற்றியுள்ள ஒரு திரைப்படம் தான் லியோ. பல ஆண்டுகள் கழித்து நடிகை திரிஷா அவர்கள் இந்த திரைப்படத்தில் விஜய் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பதும் அனைவரும் அறிந்ததே.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், ஆக்சன் கிங் அர்ஜுன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள லியோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தை தவிர இந்தியாவில் உள்ள பிரபல மாநிலங்களில் அக்டோபர் 19ஆம் தேதி காலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Locked & Loaded 🔥🧊 from October 19 pic.twitter.com/Y1PnvvYcaS
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh)ஆனால் தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்திற்கான முழு பணிகளும் முடிக்கப்பட்டு, தற்பொழுது லியோ திரைப்படத்தின் பிரிண்டுகளை விநியோகிக்கும் பணி துவங்கி உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களும், லியோ திரைப்படத்தின் இசையமைப்பாளரான ராக் ஸ்டார் அனிரூத் அவர்களும் ஒன்று போல ஒரே புகைப்படத்தை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
Locked & Loaded 🔥🧊 from October 19 pic.twitter.com/JdRikoh3SA
— Anirudh Ravichander (@anirudhofficial)பின்னணியில் தளபதி விஜயின் லியோ பட போஸ்டர் இருக்க, அதற்கு முன்பாக நின்று இணைந்த கைகளாக அணி அவர்களும் லோகேஷ் கனகராஜ் அவர்களும் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது லியோ திரைப்படத்தின் ஒட்டுமொத்த பணிகளும் முடிவடைந்து, விநியோகஸ்த வேலைகள் துவங்கியதை குறிக்கிறது என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.