GOAT : மங்காத்தா போல ஒரு மாஸ் BGM.. தளபதிக்காக தரமாக தயார் செய்யும் யுவன் - வெளியான சில ருசிகர தகவல்கள்!

Ansgar R |  
Published : Mar 30, 2024, 09:44 PM IST
GOAT : மங்காத்தா போல ஒரு மாஸ் BGM.. தளபதிக்காக தரமாக தயார் செய்யும் யுவன் - வெளியான சில ருசிகர தகவல்கள்!

சுருக்கம்

The Greatest of All Time : பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு முதல் முறையாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களை இயக்கி வருகின்றார். அந்த படத்திற்கு "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு சம்பளம் வாங்கும் மிக முன்னணி நடிகராக விளங்கி வருகிறார் தளபதி விஜய். எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில், அவரது "தமிழக வெற்றிக் கழகம்" போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த தேர்தலில் தனது கட்சியின் சார்பாக முதல் வேட்பாளராக தளபதி விஜய் அவர்கள் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் அந்த தேர்தலில் பங்கேற்கும் முன் தனது திரையுலக வாழ்க்கைக்கு அவர் முற்றுப்புள்ளி வைக்க உள்ளார் என்பது தான் மிகப்பெரிய சோக செய்தியாக அவரது ரசிகர்கள் மனதில் உள்ளது. ஆகவே தளபதி 68 மற்றும் 69 ஆகிய இரு திரைப்படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. 

Sofa Boy ஆடி பாடி கலக்கும் "ஸ்கூல் லீவ் விட்டாச்சு" ஆல்பம் பாடல் !!

குறிப்பாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி விஜயின் "கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள சில தகவல்களின்படி மங்காத்தா திரைப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா போட்ட அந்த மாஸ் பிஜிஎம்-ஐ போலவே தளபதிக்காக மிகச் சிறந்த முறையில் ஒரு BGMஐ அவர் தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது. 

மேலும் ஏப்ரல் 14ம் தேதி GOAT படத்தின் முதல் சிங்கள் பாடல் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும். அதே போல ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜய் அவர்களுடைய பிறந்தநாள் அன்று இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவல்கள் எதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.  

Soodhu Kavvum 2 : சிவா காமெடியில் மிரட்டும் சூது கவ்வும் 2 - அந்தோணி தாசன் குரலில் வெளியான First Single!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்