தளபதியின் GOAT.. போஸ்டர் குறித்த சுவாரசிய தகவலை பகிர்ந்த ஸ்டண்ட் மாஸ்டர் - தெறி மாஸ் சம்பவம் லோடிங்!

Ansgar R |  
Published : Jan 22, 2024, 11:31 PM IST
தளபதியின் GOAT.. போஸ்டர் குறித்த சுவாரசிய தகவலை பகிர்ந்த ஸ்டண்ட் மாஸ்டர் - தெறி மாஸ் சம்பவம் லோடிங்!

சுருக்கம்

Thalapathy Vijay GOAT : தளபதி விஜய் முதல் முறையாக பிரபல இயக்குனர் வெங்கட் இயக்கத்தில் நடிக்க உள்ள திரைப்படம் தான் The Greatest of All Time என்கிற GOAT.

கடந்த 2023 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் அவர்களின் நடித்த லியோ திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் மாபெரும் ஹிட் ஆனது. அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகவதற்கான பணிகள் துவங்குவதற்கு முன்பாகவே அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டு உள்ளது என்றே கூறலாம். 

இந்நிலையில் விரைவில் அரசியலில் தளபதி விஜய் அவர்கள் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், விறுவிறுப்பாக அவருடைய 68வது பட பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த திரைப்படம் குறித்த பல தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டே வருகிறது. முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் அவர்கள் நடித்து வருவது  குறிப்பிடத்தக்கது. 

ராதா மகளை தொடர்ந்து சுரேஷ் கோபி மகள் திருமணத்தில் எழுந்த தங்க நகை சர்ச்சை - அவரே கொடுத்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

"கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்கின்ற இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் விஜய் உடன் இணைந்து மூத்த நடிகர்கள் பிரபுதேவா மற்றும் பிரசாந்த், நடிகைகள் லைலா மற்றும் சினேகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்திற்கு சண்டை பயிற்சியாளராக பணிபுரிந்து வரும் திலீப் சுப்பராயன் அண்மையில் ஒரு பேட்டியில் பேசும் பொழுது மிகப்பெரிய பொருட்செலவில் GOAT திரைப்படம் உருவாகி வருகிறது என்று கூறியுள்ளார். 

மேலும் இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட சண்டை காட்சிகள் படமாகியுள்ளதாகவும், அவர் கூறினார். மேலும் பொங்கல் தினத்தில் வெளியான அந்த போஸ்டரில் பின்னணியில் இருக்கும் ஹெலிகாப்டர் போஸ்டருக்காக உருவாக்கப்பட்டது அல்ல, அது திரைப்படத்தின் ஒரு முக்கிய அம்சம், அதன் பின்னணியில் ஒரு மாபெரும் கதைக்களம் இருக்கிறது என்று கூறி ரசிகர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறார். இவ்வாண்டு இறுதியில் GOAT திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Sivakarthikeyan: நண்பன் என நினைத்த காமெடி நடிகர்..! காசு கொடுத்து அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்..!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!