முதல் படமே வெள்ளிவிழா.. தல தளபதிக்கு நிகரான புகழ் - பல ஹிட் படங்களை கொடுத்த பிரஷாந்த் - Net Worth எவ்வளவு?

By Ansgar R  |  First Published Jan 22, 2024, 10:57 PM IST

Actor Top Star Prashanth : தமிழ் திரையுலகில் 90களின் துவக்கத்தில் தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவருக்கும் முன்னதாகவே மாபெரும் புகழை அடைந்த ஒரு நடிகர் தான் டாப் ஸ்டார் பிரசாந்த்.


இயக்குனர் தியாகராஜன் அவர்களுடைய மகனான டாப் ஸ்டார் பிரசாந்த் திரை உலகில் அறிமுகமாக பொழுது சண்டை பயிற்சி, குதிரை ஏற்றம் மற்றும் நடனம் உள்ளிட்டவற்றை கற்றுக்கொண்டு திரை உலகில் களமிறங்கினார். இவர் நடிப்பில் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான "வைகாசி பொறந்தாச்சு" என்கின்ற திரைப்படம் வெள்ளிவிழா கண்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் பிரசாந்த் நடிப்பில் 90களின் துவக்கத்தில் வெளியான "செம்பருத்தி", "திருடா திருடா" மற்றும் "ஆணழகன்" உள்ளிட்ட பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக மாறியது. குறிப்பாக "கல்லூரி வாசல்" திரைப்படத்தில் நீண்ட முடியோடு வரும் பிரசாந்திற்கு அப்பொழுதே பெண் ரசிகர்கள் அதிகம் என்றால் அது மிகையல்ல. 

Latest Videos

ராதா மகளை தொடர்ந்து சுரேஷ் கோபி மகள் திருமணத்தில் எழுந்த தங்க நகை சர்ச்சை - அவரே கொடுத்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

கடந்த 2006 ஆம் ஆண்டு வரை திரை உலகில் உச்ச நடிகராக இருந்த அவருக்கு சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக தொடர் சரிவை சந்திக்க தொடங்கினார். சுமார் ஐந்து ஆண்டு காலம் எந்தவித திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த நடிகர் பிரசாந்த் அவர்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு மீண்டும் நடிக்க தொடங்கினார். இருப்பினும் இந்த 13 ஆண்டுகளில் அவர் நடிப்பில் வெறும் 4 திரைப்படங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது என்று கூறினால் அது மிகையல்ல.

பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பிரசாந்த் அவர்களுக்கு பெரிய அளவில் சொத்து இருக்கிறது என்பது பலரும் அறிந்த உண்மையே. குறிப்பாக சென்னையில் மட்டும் பல அடுக்குமாடி கட்டிடங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு நடிகர் தான் பிரசாந்த். அவர் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே பல லட்சங்கள் சம்பளமாக பெற்ற நடிகர் பிரசாந்த் அவர்களுக்கு பல பங்களாக்களும் சொகுசு கார்களும் உள்ளது. இப்போது அவருடைய சொத்து மதிப்பு சுமார் 90 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

Sivakarthikeyan: நண்பன் என நினைத்த காமெடி நடிகர்..! காசு கொடுத்து அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்..!

click me!