
கோலிவுட்டின் முன்னணி நடிகரான விஜய்க்கு தமிழ் சினிமாவை தாண்டியும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். தற்போது தளபதியின் ஒட்டு மொத்த ரசிகர்கள் பட்டாளமும் எதிர்பார்த்து காத்திருப்பது மாஸ்டர் பட ரிலீஸ் எப்போது என்று தான். லோகேஷ் கனகராஜ் - விஜய் முதன் முதலில் கூட்டணி அமைத்திருக்கும் இந்த படம் கடந்த 9ம் தேதி ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது.
ஆனால் கொரோனா பிரச்சனை காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டதால் படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. நேற்று முதல் மாஸ்டர் படத்தில் மிஞ்சமிருந்த போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி எப்போது என்று விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த சமயத்தில் விஜய் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: “தொடர் உறவில் இருப்பவர்கள் கைதூக்குங்க”... படுக்கையறை போட்டோவுடன் ஏடாகூட கேள்வி கேட்ட மாளவிகா மோகனன்...!
விஜய் எப்போதும் தனது படத்தின் ஷூட்டிங் முடிந்த கையோடு வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் 2014ம் ஆண்டு விஜய் தனது நண்பர்களுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற போது வித்தியாசமான உடையில் ஜாலியாக போஸ் கொடுத்துள்ளார். விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: குட்டி பாப்பா டூ கவர்ச்சி கன்னியாக உருவெடுத்தது வரை சன்னி லியோனின் யாரும் பார்த்திடாத புகைப்பட தொகுப்பு...!
சில நாட்களுக்கு முன்பு தளபதி விஜய் தனது லயோலா காலேஜ் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. இதையடுத்து தற்போது இந்த புகைப்படம் இந்த போட்டோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.