கவின்னை மறைமுகமாக விளாசிய லாஸ்லியா? சந்தேகத்தை ஏற்படுத்திய புகைப்படம்!

Published : May 13, 2020, 03:33 PM ISTUpdated : May 13, 2020, 03:39 PM IST
கவின்னை மறைமுகமாக விளாசிய லாஸ்லியா? சந்தேகத்தை ஏற்படுத்திய புகைப்படம்!

சுருக்கம்

உலக நாயகன் கமலஹாசன் கடந்த வருடம் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு விளையாடி, கடைசியில் காதலர்கள் என பெயரெடுத்தவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது, இருவரும் காதலர்கள் போல் நடந்து கொண்டாலும் வெளியே வந்ததும், இருவருக்கும் சம்மந்தமே இல்லாதது போல் நடந்து கொண்டனர்.  

உலக நாயகன் கமலஹாசன் கடந்த வருடம் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு விளையாடி, கடைசியில் காதலர்கள் என பெயரெடுத்தவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது, இருவரும் காதலர்கள் போல் நடந்து கொண்டாலும் வெளியே வந்ததும், இருவருக்கும் சம்மந்தமே இல்லாதது போல் நடந்து கொண்டனர்.

ஆனால் இவர்களுடைய ஆர்மியை சேர்ந்தவர்களோ, விடா பிடியாக, 'கவிலியா' என்கிற பெயரில் இருவரும் இணைந்திருப்பது போல பல புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ஒரு சில பேட்டிகளில் காதல் குறித்து பேச்சு எழுப்பிய போது, கவின் இப்போது தனக்கு நிறைய கடமைகள் உள்ளது என்றும், பின்பு தான் என்னுடைய வாழ்க்கை பற்றி சிந்திக்க முடியும் என தெரிவித்தார். அதே போல், லாஸ்லியா இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பல, பேட்டிகளை தவிர்த்து விட்டார்.

மேலும் செய்திகள்: பிரபல பழம்பெரும் நடிகர் உடல்நல குறைவால் காலமானார்! சோகத்தில் திரையுலகினர்!
 

தற்போது இருவருமே, அடுத்தடுத்து நடிக்கும் திரைப்படங்களில் பிஸியாகி உள்ளனர் என்பது நாம் அறிந்தது தான்.  

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகச் சிறந்த ஜோடி என்று கருதப்பட்ட கவின், லாஸ்லியா ஜோடிக்குள் தற்போது ஏதோ பிரச்சனை என தெரிகிறது. எனவே கவினை மறைமுகமாக லாஸ்லியா தாக்கி கருத்து பதிவிட்டுலாத தெரிகிறது.

மேலும் செய்திகள்:கொரோனா அச்சுறுத்தலில் கோத்தகிரி பயணம்..! தனிமை படுத்தப்பட்ட நடிகர் ராதாரவி உட்பட 8 பேர்!
 

கவின் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கண்ணாடி முன் நின்று எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்து அதில் ’எடுக்காத டிரஸ்ல போட்டோ எடுத்து வச்சுகிட்டா எப்பயாவது உதவும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

 

 

இவர் இந்த பதிவை போட்ட,  அடுத்த சில நிமிடங்களில் லாஸ்லியா இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அதே போல் கண்ணாடி முன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து,  ’வாழ்க்கை உங்களுக்கு ஏதாவது கற்பிக்க முயற்சிக்கிறது, எனவே உங்கள் தவறுகளை ஏற்றுக்கொண்டு உங்களை கண்ணாடியில் பாருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்: உயிருக்கு உயிராய் காதலித்து பிரிந்த முன்னணி நடிகர் - நடிகைகள்..! புகைப்பட தொகுப்பு!
 

எனவே இந்த கருத்தின் மூலம் லாஸ்லியா, மறைமுகமாக கவினை விளாசியுள்ளார் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். இதில் எந்த அளவிற்கு உண்மை ஒளித்திருக்கிறது என்பதை கவின் மற்றும் லாஸ்லியா தான் கூற வேண்டும்.

சந்தேகத்தை ஏற்படுத்திய அந்த புகைப்படம் இதோ..

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்
தன்னோட வாழ்க்கைக்கே வழிய காணோம்; இதுல தங்கச்சிக்கு அட்வைஸ் பண்ணும் தங்கமயில்