வெறியாட்டம் ஆடும் கொரோனா... மகனை நினைத்து பரிதவிக்கும் தளபதி விஜய்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Apr 14, 2020, 9:45 AM IST

கொரோனா பிரச்சனை உச்சத்தில் உள்ள இந்த சமயத்தில் மகன் சஞ்சய் வெளிநாட்டில் இருப்பது நடிகர் விஜய்யை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது 


லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் தயாரான “மாஸ்டர்” திரைப்படம் கடந்த 9ம் தேதி ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது. உலகத்தையே உலுக்கி எடுக்கும் கொரோனா பிரச்சனை தற்போது இந்தியாவில் கோர தாண்டவம் ஆடிவருகிறது. அதனால் இன்றுடன் முடியவிருந்த ஊரடங்கு உத்தரவை முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்துள்ளார். இதனால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால்  “மாஸ்டர் “ பட மேலும் சில நாட்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

கொரோனா திரையுலகை எந்த அளவிற்கு ஆட்டி வைக்கிறதோ அதை விட அதிகமாகவே தளபதி விஜய்யை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே சொன்ன தேதிக்கு மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய முடியாததால் விநியோகஸ்தர்கள் பணத்தை திரும்பி கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் கூட பெரிதாக அலட்டிக்கொள்ளாத விஜய், தற்போது மிகப்பெரிய சோகத்தில் மூழ்கியுள்ளார். 

இதையும் படிங்க: சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் பிரபல நடிகை... ஓவர் கிளாமர் போட்டோஸை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...!

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் சினிமாத்துறை சார்ந்த படிப்பை படித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தியே. கொரோனா பிரச்சனை காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் விஜய் மகன் கனடாவிலேயே தங்க வேண்டிய சூழலால் ஏற்பட்டுள்ளதாம். அங்கு கொரோனாவின் தாக்கம் பெரிய அளவில் இல்லை என்றாலும், இப்படிப்பட்ட நெருக்கடி நிலையில் மகனை பிரிந்திருப்பதை நினைத்து தளபதி விஜய் மிகவும் சோகத்தில் ஆழ்த்திருக்கிறார் என்று நடிகர் சித்ரா லட்சுமண் தெரிவித்துள்ளார். 
 

click me!