கேட்க கூடாத கேள்வி இது...! ரசிகரிடம் இருந்து நைசாக எஸ்கேப் ஆன மகிமா நம்பியார்!

Published : Apr 13, 2020, 07:59 PM ISTUpdated : Apr 13, 2020, 08:01 PM IST
கேட்க கூடாத கேள்வி இது...! ரசிகரிடம் இருந்து நைசாக எஸ்கேப் ஆன மகிமா நம்பியார்!

சுருக்கம்

'சாட்டை' படத்தின் மூலம் பள்ளி மாணவியாக அறிமுகமானவர் நடிகை மகிமா நம்பியார். இந்த படத்தை தொடர்ந்து,' குற்றம் 23', 'புரியாத புதிர்', 'மகாமுனி', உள்ளிட்ட பல படங்களில் நடித்து திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகள் லிஸ்டில் இடம்பிடித்தார்.  

'சாட்டை' படத்தின் மூலம் பள்ளி மாணவியாக அறிமுகமானவர் நடிகை மகிமா நம்பியார். இந்த படத்தை தொடர்ந்து,' குற்றம் 23', 'புரியாத புதிர்', 'மகாமுனி', உள்ளிட்ட பல படங்களில் நடித்து திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகள் லிஸ்டில் இடம்பிடித்தார்.

மேலும் தற்போது, 'ஐங்கரன்', 'அசுரகுரு', 'கிட்னா' உள்பட ஒரு சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 

இந்தியாவில் தற்போது 144 தடை கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருவதால், பிரபலங்கள் யாரும் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர். கிடைத்த இந்த ஓய்வு நேரத்தில் தங்களுக்கு பிடித்த வேலைகளை செய்து வருகிறார்கள்.


அந்த வகையில் நடிகை மகிமா நம்பியார், தனக்குள் ஒளித்து வைத்திருந்த, ஓவிய திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சுவற்றில் இவர் ஒரு பெண்ணின் அழகிய ஓவியத்தை தீட்டும் வீடியோவை வெளியிட்டு,  இந்த நேரத்தில் எனக்குள் இருந்த பிக்காஸோ வெளியே வந்துள்ளார் என்றும்,  நீங்களும் ஓவியராக மாற உங்களுக்கு தேவை ஒரு சுவர், ஒரு பென்சில் மற்றும் பாராட்ட ஒரு அம்மா’ என்றும் கூறியுள்ளார். 

அதே நேரத்தில், மகிமா நம்பியாரின் ஓவியத்தை பார்த்து, நெட்டிசன்கள் பலரும் பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், தினமும் ஒரே மாதிரி செய்வது பிடிக்காமல், ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் பேசினார் மகிமா. அப்போது அவரை பார்த்து ரசிகர்கள் ஒருவர் உங்க வயது என்ன என கேட்க, பெண்களிடம் வயதையும்... ஆண்களிடம் சம்பளத்தையும் கேட்கக்கூடாது என சாமர்த்தியமாக பதில் பேசி எஸ்கேப் ஆகியுள்ளார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!