பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தளபதி விஜய் அவர்களின் லியோ திரைப்பட ட்ரெய்லர் தற்பொழுது வெளியாகி உள்ளது. துவக்கம் முதல் முடிவு வரை உச்சகட்ட பரபரப்போடு செல்லும் லியோ பட ட்ரைலர், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம்.
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏற்கனவே தளபதி விஜய் அவர்கள் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில், இரண்டாவது முறையாக இந்த லியோ திரைப்படத்தில் அவருடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய திரை உலகை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மிக முக்கியமான நடிகர்கள் இணைந்து இந்த லியோ திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர் என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் பல யுகங்களை இணையத்தில் முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் தனது இரு அண்ணன்களுடன் இணைந்து போதைப்பொருள் சம்பந்தமான பணியில் ஈடுபட்டு வரும் லியோ கதாபாத்திரத்தை போலவே பார்தி என்ற மற்றொரு கதாபாத்திரத்தில் தளபதி விஜய் அவர்கள் நடித்திருக்கிறார்.
நாங்க லியோ ட்ரைலர் பார்த்தே ஆகணும்.. கும்பலாக குவிந்த ரசிகர்கள் - ரோகினி திரையரங்கில் பரபரப்பு!
அந்த பார்தி என்ற கதாபாத்திரத்தின் மனைவி தான் திரிஷா, இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. லியோ செய்த ஏதோ சில செயல்களுக்காக அவரை அவருடைய அண்ணன்கள் உட்பட பலர் தேடி வரும் நிலையில், பார்த்தி அவர்கள் கையில் அகப்பட்டு பல சிக்கல்களை சந்திக்கின்றார். இதனால் அவருடைய குடும்பமும் பெரிய அளவில் இன்னல்களுக்கு உள்ளாகிறது.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இறுதியில் பார்த்தி, லியோவை தேடும் கும்பலில் இருந்து தப்பித்தாரா? அல்லது லியோ தான் தனது பழைய வாழ்க்கையை வெறுத்து தனக்கென்று மனைவி குழந்தை என்று ஒரு தனி வாழ்க்கையை பார்தி என்ற பெயரில் மேற்கொண்டு வருகிறாரா? என்பதுவே லியோ திரைப்படத்தின் கதைக்களமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த படத்தில் சைக்கோ கில்லர் கதாபாத்திரத்தில் பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் நடித்துள்ளார். மேலும் லியோ திரைப்படத்தில் வரும் அந்த ஹயினா காட்சிகள் மிகவும் தரமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும், தளபதி விஜய் தனது ரசிகர்களுக்கு சிறப்பான விருந்து ஒன்றை வைத்துள்ளார் என்றே கூறலாம்.
என்ன தளபதி பொசுக்குன்னு கெட்ட வார்த்த பேசிடீங்க.! அடிச்சு தும்சம் செய்யும் கொல மாஸ் 'லியோ' ட்ரைலர்!