மக்களுக்கு தேவையானதை சட்டமாக்க வேண்டும்... அதற்குள் அடைக்க கூடாது... சிஏஏவை தாறுமாறாக விமர்சித்த விஜய்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 15, 2020, 09:46 PM IST
மக்களுக்கு தேவையானதை சட்டமாக்க வேண்டும்... அதற்குள் அடைக்க கூடாது... சிஏஏவை தாறுமாறாக விமர்சித்த விஜய்...!

சுருக்கம்

தனது ஒவ்வொரு படத்தின் ஆடியோ ரிலீஸின் போதும் நடிகர் விஜய், அப்போதைய கரண்ட் பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து தெறிக்கவிடுவார். 

தளபதி விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த அந்த சம்பவம், விஜய்யின் குட்டி ஸ்டோரி. அதை கேட்பதற்காக தான் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காத்துகிடந்தனர். 

விழா மேடையில் பேசிய தளபதி விஜய், முதலில் தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். காரணம் கடந்த முறை நடந்த ஆடியோ ரிலீஸ் பங்கஷனின் போது சில விரும்ப தகாத செயல்கள் நடைபெற்றன. அதனால் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரசிகர்கள் இல்லாமல் நடத்த முடிவு செய்தார். அதற்கு தான் அந்த மன்னிப்பு. 

தனது ஒவ்வொரு படத்தின் ஆடியோ ரிலீஸின் போதும் நடிகர் விஜய், அப்போதைய கரண்ட் பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து தெறிக்கவிடுவார். அதன்படி மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், மக்களுக்கு எது தேவையோ அதை தான் சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது என இந்தியாவின் தற்போதைய பிரச்சனையான சிஏஏ சட்டம் குறித்து விமர்சித்தார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!