மாஸ்டர் இசை வெளியீட்டு விழா??... ஜெபக்கூட்டமா?? சர்ச்சையை கிளப்பிய தயாரிப்பாளர் பேச்சு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 15, 2020, 09:23 PM ISTUpdated : Mar 16, 2020, 07:45 AM IST
மாஸ்டர் இசை வெளியீட்டு விழா??... ஜெபக்கூட்டமா?? சர்ச்சையை கிளப்பிய தயாரிப்பாளர் பேச்சு...!

சுருக்கம்

ஏற்கனவே நடிகர் விஜய் மீது மதமாற்றம் செய்வதாக வதந்தி பரவி வரும் நிலையில், ஒரு பிரம்மாண்ட விழாவில் அப்படத்தின் தயாரிப்பாளரும், விஜய்யின் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோ இப்படி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

தளபதி விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசினார். அப்போது இந்த நாள் இனிய நாள், எனது தம்பி மற்றும் தளபதியுமான விஜய் அவர்களுக்கு நன்றி. நான் ஒரு நாள் விஜய்யிடம் ஒரு படம் பண்ணலாமா என்று கேட்டேன் அதனை ஞாபகம் வைத்து கொண்டு என்ன அழைத்தார்.

அப்போது அவர் பேசியதை கேட்ட போது தான் தெரிந்தது எந்த நிலைக்கு போனாலும், வந்த நிலையை மறக்காதவர் தளபதி என புகழ்ந்து தள்ளினார். எதைப் பற்றி கேட்டாலும் விஜய்யிடம் இருந்து ஒரு புன்னகை மட்டுமே பதிலாக கிடைக்கும், அந்த அமைதி தான் அவருடைய வெற்றிக்கு காரணம் என்றார்.


 
தொடர்ந்து பேசிய அவர், தன் இந்த நிலைக்கு உயர காரணம் ஏசு திருச்சபை தான். அவர்கள் தான் தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தார்கள் என்று கூறினார். ஏற்கனவே நடிகர் விஜய் மீது மதமாற்றம் செய்வதாக வதந்தி பரவி வரும் நிலையில், ஒரு பிரம்மாண்ட விழாவில் அப்படத்தின் தயாரிப்பாளரும், விஜய்யின் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோ இப்படி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?