போட்ரா வெடிய.. தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்தம் தெறிக்க வெளியான 'லியோ' ஃபர்ஸ்ட் லுக்..!

By manimegalai a  |  First Published Jun 22, 2023, 12:09 AM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்... தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு சரியாக 12 மணிக்கு வெளியிட்டு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது படக்குழு.
 


தளபதி விஜய் 'வாரிசு' படத்தை தொடர்ந்து, 'மாஸ்டர்' படத்தின் மூலம் தனக்கு ஹிட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைவது உறுதியான நிலையில், இந்த படத்தின் மீதான பரபரப்பு அப்போதே ரசிகர்களுக்கு பற்றி கொண்டது. காரணம், லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்த ஹிட் லிஸ்ட்டு தான். 'மாநகரம்' படத்தில் துவங்கி, கைதி, மாஸ்டர், விக்ரம், என தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் இவரின் வெறித்தனமான வளர்ச்சியை கண் எதிரே பார்க்க முடிந்தது.

அதிலும், கமல்ஹாசனை வைத்து இவர் கடைசியாக இயக்கிய 'விக்ரம்' திரைப்படம் 150 கோடியில், எடுக்கப்பட்டு சுமார் 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றிக்காக கமல்ஹாசன் காஸ்டலி கார் ஒன்றையும் லோகேஷ் கனகராஜூக்கு பரிசாக வழங்கினார். மிக குறுகிய நாட்களில் ஒட்டுமொத்த திரையுலகையும் அடுத்தடுத்த வெற்றிகளால் திரும்பி பாக்க வைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜின் 'லியோ' படமும் எப்படி பட்ட கதைக்களமாக இருக்கும், என்பதை பார்க்க பல ரசிகர்கள் ஆவலோடு கார்த்திருக்கின்றனர்.

Tap to resize

Latest Videos

ரவீந்தரை திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமிக்கு இவ்வளவு பெரிய மகனா? வேஷ்டி சட்டையில் கலக்குறாரே ..!

இப்படம் கேங் ஸ்டார் கதையம்சத்துடன் உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தில், விஜய்க்கு வில்லனாக கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜுன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. சஞ்சய் தத் விஜய்யின் தந்தையாகவும், திரிஷா தளபதிக்கு ஜோடியாகவும் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், சாண்டி மாஸ்டர், நடிகை பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டியன், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, பிக்பாஸ் பிரபலம் ஜனனி, கதிர்,  என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

18 வயசில் நயனையே மிஞ்சிட்டாங்களே? கழண்டு விழும் ஆடையோடு... படுக்கையறையில் கவர்ச்சி காட்டிய அனிகா! போட்டோஸ்..

இந்நிலையில் 'லியோ' படத்தில் இருந்து தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு, தளபதியே பாடியுள்ள 'நா ரெடி' பாடல் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. அதே போல் இதன் புரோமோ வீடியோவும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு சரியாக 12 மணிக்கு 'லியோ' படத்தில் இருந்து 'தளபதியின்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது, ரத்தம் நெறிக்க, தளபதி பனி கரடியுடன் இருக்கும் படி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட, இந்த போஸ்டர் விஜய் ரசிகர்கள் மத்தியில் வெறித்தனமான வரவேற்பை பெற்று வருகிறது.

நள்ளிரவில் திடுதிப்புனு காவல் நிலையத்திற்கு ஓடிய பிக்பாஸ் ரக்ஷிதா! கணவர் தினேஷ் மீது பரபரப்பு புகார்..!

இந்த போஸ்டரில், தளபதி மிகவும் ஸ்டைலிஷாக உள்ளார். இந்த போஸ்டரே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.  'லியோ' படத்திற்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது 'லியோ' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக முழுவீச்சில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படக்குழு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

is here! Happy Birthday anna!
Elated to join hands with you again na! Have a blast! 🤜🤛❤️ 🔥🧊 pic.twitter.com/wvsWAHbGb7

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh)

 

click me!