
விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னால் மாநில தலைவர் ஜெயசீலன், இயக்கத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக சென்னை, கோவை, ராணிபேட்டை, காஞ்சிபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காவல் ஆணையர் அலுவலகங்களில் விஜய் ரசிகர்கள் புகார் மனு அளித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தந்த மாவட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகார் மனுவில், விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாநில தலைவராக பொறுப்பு வகித்து வந்த ஜெயசீலன் என்பவர் கடந்த 2011ம் ஆண்டு இயக்கத்திற்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், தனியார் தொலைகாட்சி ஒன்றில் பேட்டியளித்த ஜெயசீலன் இயக்கத்தின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், இயக்க நிர்வாகிகள் குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்டு இயக்கத்திற்கு குந்தகம் விளைவித்துள்ளார். மேலும் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கும் முன்னாள் எம்எல்ஏ புஸ்ஸி.ஆனந்த் இயக்கத்திற்கு எதிராக செயல்படுவதாகவும், சாதி ரீதியாக செயல்பட்டு விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளரை நீக்கிவிட்டு அவர் சாதியை சேர்ந்தவர்க்கு மாவட்ட தலைவர் பதவியை வழங்கியுள்ளதாக கூறி சாதி மோதல் ஏற்படும் வகையில் ஜெயசீலன் பேசி வருகிறார்.
இதையும் படிங்க: சன் டி.வி.யின் பிரபல சீரியலில் இருந்து நடிகை விலகல்... ரசிகர்கள் அதிர்ச்சி...!
விஜய் நடித்து பொங்கல் அன்று வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் டிக்கெட் 100 ரூபாய் மட்டும்தான் என்றும் ஆனால் ரசிகர்களுக்கு 1000 ரூபாய்க்கு விற்பனை செய்து அதில் கிடைத்த பணத்தை கொண்டு இயக்கத்தின் செயல்பாடுகளை செய்துவருவதாக பொய்யான தகவல்களை பரப்புகிறார். இயக்கத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டை பரப்பிவருவதால் விஜய் மக்கள் இயக்கத்தினர் மிக மன உளைச்சலில் இருக்கின்றனர். பொய்யான தகவல்களை பரப்பிவரும் ஜெயசீலனை கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் மாநில தலைவரான ஜெயசீலனைக் கண்டித்து விஜய் ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.