
டிக்-டாக் மூலமாக சாமானியர்கள் கூட தங்களுக்கு இருக்கும் நடிப்பு திறமையை தட்டி எழுப்பி வெளிக்கொண்டு வந்தனர். அதனை சிலர் ஆபாச நடனம், டபுள் மீனிங் டைலாக்கில் டிக்டாக் வீடியோக்களை வெளியிடுவது என்றும் பல வேண்டாத காரியங்களை செய்து, கடும் விமர்சனங்களை வாங்கிக் கட்டிக்கொண்டனர். இந்நிலையில் 18 வயதிலேயே டிக்-டாக்கில் பிரபலமாக இருந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தைச் சேர்ந்த தசாரியா க்விண்ட் நோயஸ் என்ற 18 வயது பெண், டிக்-டாக்கில் மிகவும் பிரபலமானவர். இன்ஸ்டாகிராம், யூ-டியூப்பிலும் இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். இளம் வயதிலேயே சோசியல் மீடியா இன்புளூயன்சராக வலம் வந்து கொண்டிருந்த தசாரியா, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய தந்தை தெரிவித்துள்ளார்.
கடந்த 8ம் தேதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த தசாரியா, இதுவே தன்னுடைய கடைசி வீடியோ எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோவில் கூட ஜாலியாக ஆட்டம் போட்ட நிலையில், திடீரென தற்கொலை செய்து கொண்டதை கேள்விப்பட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவருடைய தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், காதலர் மைக் உடன் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம என ரசிகர்கள் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.