
'ரெமோ' படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். 'கைதி' படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள இந்த படத்தையும் ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதமே இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்த போதும், கொரோனா பிரச்சனை காரணமாக படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. 'மாஸ்டர்', 'ஈஸ்வரன்' படங்களால் பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கி 'சுல்தான்' திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. முதலில் ஓடிடி தளத்தில் வெளியாக இருந்த திரைப்படம், தற்போது தியேட்டர் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக விவேக் - மெர்வின், எடிட்டராக ரூபன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்... ஏப்ரல் 2ம் தேதி முதல் 'சுல்தான்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது .
இந்நிலையில் விவேக்-மெர்வின் இசையில் அனிருத், ஜூனியர் நித்யா மற்றும் கானா குணா பாடிய 'சண்டையில கிழியாத சட்டை இல்ல குமாரு' என்று தொடங்கும் செம்ம குத்தாட்ட பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. செம்ம துள்ளலான... எழுத்து ஆடவைக்கும் வரிகளை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார்.இந்த பாடலின் ரெக்கோர்டிங்கிற்காக 30 இசை கலைஞகளை ஒரு திரட்டி இந்த பாடல் உருவாகியுள்ளது.
அந்த பாடலின் வீடியோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.