
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், டி.சிவாவின், மூத்த சகோதரர் ராமலிங்கம் நேற்று இரவு 9 :30 மணி அளவில் காலமானார்.
ராமலிங்கம் இறந்த செய்தியை தயாரிப்பாளர் டி.சிவா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்க, ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். உடல்நல குறைவு காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
தயாரிப்பாளர் டி சிவாவின், அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் இணை தயாரிப்பாளராக பணியாற்றிய ராமலிங்கம் பல சிறந்த படங்களை தயாரித்த தன்னுடைய சகோதரர் டி.சிவாவின் வளர்ச்சிக்கும், அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தவர்.
குறிப்பாக ராமலிங்கம் மற்றும் டி சிவா தயாரிப்பில் உருவான, பிரபு மற்றும் சுகன்யா நடித்த 'சின்ன மாப்பிள்ளை', பிரபுதேவா மற்றும் ரோஜா நடித்த 'ராசையா' , ராஜ்கிரண் மற்றும் வனிதா விஜயகுமார் நடித்த மாணிக்கம், போன்ற பல படங்களை தயாரித்துள்ளார். பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பின் 2008ஆம் ஆண்டு வெங்கட் பிரபு காமெடி, திரில்லராக இயக்கிய 'சரோஜா' மற்றும் மாதவன் நடித்த 'வாழ்த்துக்கள்' படத்தை ஒரே ஆண்டில் தயாரித்திருந்தார். இதில் 'சரோஜா படம்' மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
தற்போது வெட்கட் பிரபு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து இயக்கியுள்ள 'பார்ட்டி' மற்றும் 'அக்னி சிறகுகள்' என இரு பெரிய படங்களை தயாரித்து முடிந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டே வெளியாக வேண்டிய 'பார்ட்டி' திரைப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. அதே போல் 'அக்னி சிறகுகள்' படத்தின் போஸ்ட் புரோடுக்ஷன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் அம்மாவின் இணை தயாரிப்பாளரும் டி.சிவாவின் மூத்த சகோதரருமான ராமலிங்கத்தின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.