Thalapathy 66: விஜய்க்கு ஜோடியாக நடிப்பதற்கு கோடிக்கணக்கில் சம்பளம் கேட்ட ஹீரோயின்...! ஓகே சொன்ன நிறுவனம்..!

Thalapathy 66: பீஸ்ட் படத்திற்கு பிறகு, விஜய் நடிப்பில் அடுத்து தயாராக இருக்கும் தளபதி 66வது திரைப்படத்தில், விஜய்க்கு ஜோடியாகும் நடிகைக்கு ரூ.4 கோடி சம்பளம் வழங்க நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Thalapathy 66 movie heroine salary is very high

பீஸ்ட் படத்திற்கு பிறகு, விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 66 படம் பற்றிய எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் 13-ந் தேதி திரைக்கு வருகிறது.இந்த திரைப்படத்தினை நெல்சன் இயக்கியுள்ளார். செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இணைத்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் (Anirudh) இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே என்பவர் நடித்திருக்கிறார். 

Latest Videos

Thalapathy 66 movie heroine salary is very high

விஜய்யின் 66-வது படம்:

இவர் நடிப்பில் அடுத்து தயாராக இருக்கும் 66வது திரைப்படம். இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க உள்ளார். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கிவர் ஆவார். மேலும் இப்படத்தை டோலிவுட்டை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இப்படம் மூலம் நடிகர் விஜய் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். 

விஜய்க்கு ஜோடியாகும் ஹீரோயின் யார்..?

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை குறித்த பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. முதலில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், ராஷ்மிகா தான், விஜய் படத்தின் கதாநாயகி என்று தகவல் வெளியானது.

ஆனால், இதுவரை படக்குழு அதனை உறுதிசெய்யவில்லை. இதன்பின், பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் என்று கூறப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்றிலிருந்து திஷா பாட்னி என்று கூறப்பட்டு வருகிறது.

கோடிக்கணக்கில் சம்பளம் கேட்ட ஹீரோயின்:

இந்நிலையில், சமீபத்திய தகவல்படி தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சனோன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ரூ. 4 கோடி சம்பளம் வழங்க நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

 மேலும் படிக்க....Alya Manasa: தாய் பாலில் செய்த அழியாத பொக்கிஷம்! பரிசாக கொடுத்த சஞ்சீவ்..நெகிழ்ந்து போன ஆல்யா...

vuukle one pixel image
click me!
vuukle one pixel image