Manmadha Leelai : மன்மதலீலை படத்துக்கு தடைகோரி பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.
மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள படம் மன்மதலீலை. அடல்ட் காமெடி கதையம்சம் கொண்ட இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்து உள்ளார். நாளை இப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் இப்படத்திற்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தது.
அந்த மனுவில், தங்கள் நிறுவனம் தயாரித்த இரண்டாம் குத்து என்ற படத்தின் விநியோக உரிமையால் ஏற்பட்ட நஷ்டம் 1.40 கோடி ரூபாயை தங்களுக்கு வழங்க வேண்டிய நிலையில், வெங்கட் பிரபு இயக்கிய மன்மத லீலை என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. அந்த தொகையை எங்களுக்கு தராவிட்டால் மன்மதலீலை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என அதில் கோரப்பட்டிருந்தது.
நீதிபதி M சுந்தர் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ரூ.30 லட்சத்தை 4 வாரங்களில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் மன்மதலீலை படத்தை வெளியிடலாம் என்றூம் இரண்டாம் குத்து மற்றும் மன்மதலீலை படங்களின் விவகாரங்களை சமரச தீர்வு மைய நடுவரிடம் நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதையும் படியுங்கள்... BiggBoss Ultimate : பிக்பாஸ் அல்டிமேட் டைட்டிலை தட்டித்தூக்கப்போவது இவரா? - லீக்கான தகவல்... ஷாக் ஆன ரசிகர்கள்