யோகி பாபுவை கலாய்த்த தல தோனி.. 'LGM' படத்தின் விழாவில் நடந்த சம்பவம்.. க்யூட் வீடியோ..

Published : Jul 15, 2023, 11:58 AM ISTUpdated : Jul 15, 2023, 12:04 PM IST
யோகி பாபுவை கலாய்த்த தல தோனி.. 'LGM' படத்தின் விழாவில் நடந்த சம்பவம்.. க்யூட் வீடியோ..

சுருக்கம்

எல்ஜிஎம்' ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாகும், இதில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியும் அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் கோலிவுட்டில் 'எல்ஜிஎம்'  படத்தின் மூலம் தயாரிப்பாளர்களாக அடியெடுத்து வைத்துள்ளனர். 'எல்ஜிஎம்' படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஜூலை 10-ம் தேதி சென்னையில் நடந்தது.  'எல்ஜிஎம்' ஆடியோ வெளியீட்டு விழாவில் எம்எஸ் தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தன்னை சேர்த்துக் கொள்ளுமாறு யோகி பாபு கேட்டுக் கொண்டார்.

அதற்கு தோனி சொன்ன வேடிக்கையான இப்போது சமூக ஊடகங்களில் வைரலானது. யோகி பாபுவுக்கு பதில் சொன்ன தோனி, "ராயுடு ஓய்வு பெற்றுள்ளார். எனவே, சிஎஸ்கேயில் உங்களுக்கு இடம் உள்ளது. நான் நிர்வாகத்திடம் பேசுகிறேன். ஆனால், நீங்கள் படங்களில் மிகவும் பிஸியாக இருக்கிறீர்கள். நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். அவர்கள் மிக வேகமாக பந்து வீசுகிறார்கள், அவர்கள் உங்களை காயப்படுத்துவதற்காக மட்டுமே பந்து வீசுவார்கள்." என்று கூறினார்.

இதுதொடர்பான வீடியோக்கள் ஏற்கனவே வைரலான நிலையில், தற்போது அதிகம் பார்க்கப்படாத ஒரு புதிய வீடியோ வைரலாகி வருகிறது. 'எல்ஜிஎம்' வெளியீட்டு விழாவின் கேக் வெட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில் யோகி பாபுவும் தோனியும் கேக் வெட்டுவதைக் காணலாம். யோகி பாபு கேக்கை வெட்டிக் கொண்டிருக்கும் போதே, தோனி ஒரு கேக் துண்டை எடுத்து சாப்பிடுகிறார். ஆனால் யோகி பாபு ஏமாற்றத்துடன் பார்க்கும் போது, தோனி கலகலவென்று சிரிப்பதை பார்க்கலாம். பின்னர் தோனி அவருக்கு கேக்கை ஊட்டிவிடுகிறார்.

'எல்ஜிஎம்' ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாகும், இதில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நதியா அம்மாவாக நடிக்க, யோகி பாபு மற்றும் மிர்ச்சி விஜய் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ரமேஷ் தமிழ்மணி இப்படத்திற்கு இசையமைப்பதோடு மட்டுமல்லாமல் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படம் தப்போது போஸ்ட் புரொடக்ஷன் கட்டத்தில் உள்ளது. இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ் காட்டும் மாவீரன்.. முதல் நாளே இத்தனை கோடி வசூலா? வெளியான செம அப்டேட்..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!
கதறி அழும் விசாலாட்சி; ஆறுதல் சொல்லும் மருமகள்; குணசேகரின் கேம் இஸ் ஓவர் என்று பேசும் ஜனனி: எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்!