இந்நிலையில் தல அஜித் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
"நேர்கொண்ட பார்வை" படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்- ஹெச்.வினோத்-போனி கபூர் ஆகியோர் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் "வலிமை". இதில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக தல அஜித் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ளது. மேலும் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவலை வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்து வருகிறது.
ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அதில் அஜித் அனல் பறக்கும் சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து அசத்தியுள்ளாராம். அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ரிலீஸுக்கு முன்பே விஸ்வாசத்தை தட்டித்தூக்கிய "மாஸ்டர்"... டுவிட்டரில் கெத்து காட்டும் தளபதி ஃபேன்ஸ்... டரியலில் தல ரசிகர்கள்...!
இந்நிலையில் தல அஜித் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆளில்லா விமானத்தை இயக்குவது குறித்து போலீசாருக்கு அஜித் பயிற்சி அளித்ததாக கூறப்படுகிறது. போலீசாருடன் அஜித் இருக்கும் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.