தல அஜித்தின் சூப்பர் ஹிட் பட ரீமேக்கில் இவரா?... துள்ளி குதிக்கும் ரசிகர்கள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 07, 2020, 07:57 PM IST
தல அஜித்தின் சூப்பர் ஹிட் பட ரீமேக்கில் இவரா?... துள்ளி குதிக்கும் ரசிகர்கள்...!

சுருக்கம்

தற்போது லூசிபர் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கும் சிரஞ்சீவி அடுத்து நடிக்க போகும் படம் வேதாளமாக அமைய வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் வேதாளம். வீரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிறுத்தை சிவா - அஜித் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்தது. ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தல அஜித் , காசுக்காக எதையும் செய்யும் ரவுடி, தங்கைக்காக உயிரையும் கொடுக்கும் அண்ணனாகவும் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடிய இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் கெத்து காட்டியது. அஜித்தின் மங்காத்தா வசூலையே பின்னுக்குத் தள்ளியது. 

 

இதையும் படிங்க: காரில் இருந்து இறங்கி அழுது கொண்டே ஓடிய எமி ஜாக்சன்... காரணம் என்ன தெரியுமா?

படம் குறித்த தகவல் வந்த அன்றே  56 என தற்காலிகமாக பெயரிட்ட ரசிகர்கள், சோசியல் மீடியாவை தெறிக்கவிட்டனர். மாபெரும் வரவேற்பை பெற்ற வேதாளம் திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.15.5 கோடி வசூல் செய்யததை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், அதில் பவன் கல்யாண் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தம்பிக்கு பதிலாக அண்ணன் மெகா ஸ்டார் சிரஞ்சீவியே வேதாளம் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம். 

 

இதையும் படிங்க: விஜய் மனைவியை வரம்பு மீறி அசிங்கப்படுத்திய மீரா மிதுன்... ஒத்த ட்வீட்டில் தெறிக்க விட்ட சகோதரர்...!

தற்போது லூசிபர் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கும் சிரஞ்சீவி அடுத்து நடிக்க போகும் படம் வேதாளமாக அமைய வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். பில்லா படத்தை தெலுங்கில் ரீமேக் செய்த மெஹர் ரமேஷ் இப்படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிரஞ்சீவியின் பிறந்த நாளன்று வெளியாக வாய்ப்புள்ளதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?
நீண்ட நாள் காதலரை கரம் பிடித்த நடிகைகள்; 2025 ல் திருமணம் செய்த நடிகைகளின் பட்டியல்!