தல தீபாவளி... திடீரென கசிந்த தகவலால் அஜித் ரசிகர்கள் ஹேப்பி...!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 16, 2021, 7:27 PM IST
Highlights

அஜித்தின் வலிமை பட ரிலீஸ் தேதி குறித்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து போனிகபூர் - ஹெச்.வினோத் - அஜித் ஒன்றிணைந்துள்ள வலிமை திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார். இந்த படத்தில் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

கொரோனா காரணமாக படம் குறித்த அப்டேட் அனைத்துமே தள்ளிப்போக, ரசிகர்களின் தொடர் போராட்டத்திற்கு வெற்றியாக கடந்த 11ம் தேதி மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இதனை சோசியல் மீடியாவில் தல ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். 

தல அஜித் திரையுலகிற்கு வந்து 29  ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டது. விக்னேஷ் சிவன் வரிகளில், யுவனின் இசையில்  ‘நாங்க வேற மாரி’  என தொடங்கும் அஜித்திற்கான இன்ட்ரோ பாடல் வெளியாகி பட்டையக் கிளப்பியது. 

'வலிமை' படத்தின் இறுதிக்கட்ட பட்டப்படிப்பு... அதாவது கடைசியாக எடுக்க உள்ள சண்டை காட்சி ஒன்றை மட்டும் படக்குழு, வெளிநாட்டில் படமாக்க முடிவு செய்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக, தற்போது வரை வெளிநாடு செல்லமுடியவில்லை. மேலும் வெளிநாடுகள் செல்ல மெல்ல மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்புகளுக்கான பணியில் 'வலிமை' படக்குழுவினர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் வலிமை படக்குழு இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் அஜித்தின் வலிமை பட ரிலீஸ் தேதி குறித்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது வலிமை படத்தை தீபாவளி ஸ்பெஷலாக களமிறக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டதட்ட இந்த தேதியை படக்குழு இறுதி செய்துவிட்டதாகவும், அடுத்த போஸ்டரில் உறுதியான தேதி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

click me!