
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தன்னுடைய வழக்கமான அரசியலை விளையாட்டுக் களத்தில் இறங்கி பா.ரஞ்சித் மிகப்பெரிய வெற்றி கண்டார். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது.
இருப்பினும் படத்தில் திமுகவின் கட்சி கொடி மற்றும் சின்னம் பயன்படுத்தப்பட்டதும், நெருக்கடி காலத்தில் திமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டது போன்ற காட்சிகளும் இடம்பெற்றது சில விமர்சனங்களை உருவாக்கியது. குறிப்பாக எம்ஜிஆர் குறித்து சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக அதிமுக ஏற்கவே குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில் ‘சார்பாட்டா பரம்பரை’ படம் தொடர்பாக இயக்குனர் பா. ரஞ்சித் மற்றும் அமேசான் ப்ரைம் நிறுவனத்திற்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரலாற்று படம் என்ற பெயரில் எடுக்கப்பட்ட சார்பட்டா பரம்பரை படத்தில் உண்மைக்கு புறம்பான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், இதனை ஒப்புக்கொள்ளாவிட்டால் இயக்குநர் பா.ரஞ்சித் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்றும் நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.