மாற்றி மாற்றி பேசும் மீரா மிதுன்... சைபர் க்ரைம் போலீஸ் எடுத்த அதிரடி!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 16, 2021, 4:40 PM IST
Highlights

நேற்று முன்தினம் கேரள மாநிலம் ஆழாப்புலாவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை கைது செய்தனர். 

பட்டியலினத்தவர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் நேற்று முன் தினம் கேரளாவில் கைது செய்யப்பட்டார். சோசியல் மீடியாவில் பட்டியலினத்தவர்கள் குறித்து ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியதால் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் போலீசார் அனுப்பிய சம்மனுக்கு நேரில் ஆஜராகாத மீரா மிதுன், திடீரென தலைமறைவானார். இவரை கைது செய்ய தீவிரமாக போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கேரள மாநிலம் ஆழாப்புலாவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை கைது செய்தனர். அவருடன் மீரா மிதுனின் ஆண் நண்பரான அபிஷேக் ஷாமும் கைது செய்யப்பட்டார். 

நேற்று சென்னை அழைத்து வரப்பட்ட மீரா மிதுன், காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு,  சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் மீரா மிதுனை வரும் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கைதானது முதலே மீரா மிதுன் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. 

நேற்று கேரளாவில் இருந்து சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட போது கூட, தனக்கு சாப்பாடே கொடுக்கவில்லை என்றும், என் கையை உடைக்க போலீசார் முயற்சிப்பதாகவும் கூச்சலிட்டார். அதன் பின்னர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற போதும், அந்த அறையிலிருந்து தொடர்ந்து மீரா மிதுன் கத்திக்கொண்டே இருப்பது வெளியில் கேட்டதாக கூறப்படுகிறது. இப்படி மீரா மிதுன் தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் மாற்றி மாற்றி பேசிவருவதால் சைபர் க்ரைம் போலீசார் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். அதாவது விசாரணையில் இருந்து தப்பிக்க மீரா மிதுன் இதுபோன்ற காரியங்களை செய்கிறாரா? என மனநல மருத்துவரை கொண்டு பரிசோதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

click me!