“வலிமை” படத்தில் மொத்தம் இத்தனை பாடல்களா?... சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் துள்ளி குதிக்கும் தல ஃபேன்ஸ்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 20, 2020, 04:59 PM IST
“வலிமை” படத்தில் மொத்தம் இத்தனை பாடல்களா?... சந்தோஷத்தில்   தலைகால் புரியாமல் துள்ளி குதிக்கும் தல ஃபேன்ஸ்...!

சுருக்கம்

தல அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வரும் இந்த படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. 

“நேர்கொண்ட பார்வை” படத்தை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியுடன் மீண்டும் தல அஜித் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் “வலிமை”. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அஜித்குமார், கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு செம்ம எங் லுக்கிற்கு மாறியுள்ளார். ஐதராபாத், சென்னை என மாறி, மாறி ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு செல்ஃபி... மோசமான உடையில் பிரபல நடிகை கொடுத்த கன்றாவி போஸ்...!

இப்படத்தில் அஜித்துக்கு 3 வில்லன்கள் என்றும், அதில் ஒருவராக தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கார்த்திகேயா என்பவரை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல் வெளிவந்திருந்தது.இந்த படத்தில் முதன் முறையாக இந்தி நடிகை ஹியூமா குரேஷி  அஜித்துடன் ஜோடி நடித்துள்ளார். அஜித்திற்கே டப் கொடுக்கும் அளவிற்கு பைக் சீனில் செம்ம மாஸாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: தாவணி எங்கம்மா... பாவாடை ஜாக்கெட்டுடன் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

கொரோனா பிரச்சனையால் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தள்ளிப்போயுள்ள சூழ்நிலையில் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் படத்தை 2021ம் ஆண்டு பொங்கல் அன்று ரிலீஸ் செய்யலாம் என படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம். நீரவ் ஷா ஒளிப்பதிவில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். தல ரசிகர்கள் அனைவரும் “வலிமை” படம் குறித்து மரண வெயிட்டிங்கில் காத்திருந்த சூப்பர் அப்டேட் ஒன்று கசிந்துள்ளது. 

இதையும் படிங்க: பிளாக்கில் சரக்கு விற்பனை... “திரெளபதி” நடிகர் அதிரடி கைது... கையும் களவுமாக போலீசில் சிக்கிய ஆதாரம் உள்ளே...!

தல அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வரும் இந்த படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. “மங்கத்தா” படத்தின் மூலம் தல அஜித்திற்கு தனி தீம் மியூசிக்கை உருவாக்கி கொடுத்து கெத்து காட்டிய யுவன் சங்கர் ராஜா, இந்த படத்தில் 5 விதமான ரசனைகளை பிரதிபலிக்கும் விதமாக பாடல்களை வடிவமைத்துள்ளாராம். அதில் 2 பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யுவன் சங்கர் ராஜா வலிமை படத்தில் அஜித்திற்காக என்ன மாதிரியான தீம் மியூசிக்கை இசையமைத்திருப்பார் என்பதை தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ல் ரசிகர்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களை கதி கலங்க செய்த டாப் 4 படங்களின் பட்டியல்!
கார்த்தி படத்தின் விதி; தள்ளிப்போகும் 'வா வாத்தியார்' ரிலீஸ்: முடிவில்லாத காத்திருப்பு; ஏமாற்றத்தில் ரசிகர்கள்!