அதில் நதியா தனது இரண்டு மகள்களுடன் அசத்தலாக கொடுத்துள்ள போஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.
1985ம் ஆண்டு வெளியான “பூவே பூச்சூடவா” படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நதியா. 80ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்த நதியா, உயிரே உனக்காக , நிலவே மலரே, ராஜாதி ராஜா, சின்ன தம்பி பெரிய தம்பி உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வலம் வந்தார். மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக புகழ் பெற்றவர். மற்ற நடிகைகளை விட வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியதால் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
இதையும் படிங்க: பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு செல்ஃபி... மோசமான உடையில் பிரபல நடிகை கொடுத்த கன்றாவி போஸ்...!
1988ம் ஆண்டு சிரீஸ் காட்போல் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆன நதியா, சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். நதியா - சிரீஸ் தம்பதிக்கு சனம், ஜனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த நதியா, 2004ம் ஆண்டு எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்தார்.
இதையும் படிங்க: தங்கை வித்யாவுடன் தளபதி விஜய்... தாறுமாறு வைரலாகும் பேமிலி போட்டோ...!
அதன் பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் நதியா, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளளார். அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்பத்தினர் உடன் வெளிநாடு சுற்றுலா சென்று வந்த புகைப்படங்களை நதியா பதிவிட்டுள்ளார். அதில் நதியா தனது இரண்டு மகள்களுடன் அசத்தலாக கொடுத்துள்ள போஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. இதோ...