
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி அடுத்து இணைந்துள்ள படம் வலிமை. என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித், இந்த படத்தில் காக்கி சட்டை அணிந்து நடிக்க உள்ளார். படத்தில் அஜித்திற்கு இரண்டு விதமான கெட்டப்புகள் என்பதால், தல ரசிகர்கள் அதனை திரையில் காண ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் தல அஜித்திற்கு ஹீரோயின் யார் என்பதே இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளது. ஹீரோயின் யார் என்பதை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று தல ரசிகர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், வலிமை படம் குறித்து இரண்டு நியூ அப்டேட்கள் வெளியாகியுள்ளன. ஆனா அது நீங்க நினைக்கிறது இல்ல.
கடந்த 13ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் தொடங்கிய வலிமை படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவுபெற்றுள்ளதாம். தல அஜித் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான சென்னை வந்த நிலையில், இங்கு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாம். இதுதான் அந்த டபுள் அப்டேட். தல ஃபேன்ஸ் நினைக்கிற மாதிரி ஹீரோயின் பற்றி இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.
மேலும் ஏற்கெனவே அஜித்தின் வலிமை பட கெட்டப் வெளியானதில் செம்ம அப்செட்டில் உள்ள வினோத், மற்றொரு கெட்டப் வெளியில் தெரியாமல் இருக்க முயற்சி செய்து வருகிறாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.