
கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி வெளியாகி கேரளாவில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் “அய்யப்பனும் கோஷியும்”. இந்த படத்தின் இயக்குநரும் பிரபல திரைக்கதை ஆசிரியருமான சச்சி கடந்த 18ம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். பிருத்விராஜ், பிஜுமேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த “அய்யப்பனும் கோஷியும்” திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதுமட்டுமின்றி பிருத்விராஜின் டிரைவிங் லைசென்ஸ் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
ஜூன் 15ம் தேதி சச்சிக்கு இடுப்பு எழும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வீடு திரும்பிய அன்றைய தினமே திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து திரிச்சூரில் உள்ள ஜூபிளி மிஷன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வென்டிலேட்டர் சப்போர்ட் கொடுக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். சிறப்பு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்த போதும், இயக்குநர் சச்சி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: சரிய இருந்த விஜய்... தட்டித்தூக்கிய அட்லி.... தளபதி ரசிகர்களுக்காக என்னவெல்லாம் செஞ்சிருக்கார் தெரியுமா?
இந்த படத்தை தமிழ், இந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளனர். “அய்யப்பனும் கோஷியும்” தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார். தமிழில் இந்த படத்தில் நடிக்க பல நடிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர். “அய்யப்பனும் கௌஷியும்’பிஜு மேனன் பாத்திரம் நான் நடித்தால் நன்றாக இருக்குமென இயக்குனர் சச்சியே சொன்னதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மறைந்த இயக்குநர் சச்சியுடன் சேர்ந்து தல அஜித் ஒரு படம் நடிக்க ஆசைப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: படுக்கையறையில் கணவருக்கு லிப்லாக்... முத்த போட்டோவிற்கு புதுவித விளக்கம் கொடுத்த வனிதா...!
‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை பார்த்து வியந்த அஜித், இயக்குநர் சச்சியை போனில் பாராட்டினாராம். மேலும் அவருடன் கூட்டணி சேரவும் விரும்பினாராம். இதையடுத்து அஜித்துக்காக கதை தயார் செய்த சச்சி, அதை கொரோனா ஊரடங்குக்கு பின் சொல்ல காத்திருந்தாராம். இதனிடையே சச்சி உயிரிழந்ததால் அஜித்தின் ஆசை நிறைவேறாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.