பீட்டர் பால் குடிக்கவே மாட்டாரு... வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு முன்னாள் மனைவி முகத்தில் கரி பூசிய வனிதா...!

Published : Jun 30, 2020, 06:25 PM ISTUpdated : Jun 30, 2020, 07:55 PM IST
பீட்டர் பால் குடிக்கவே மாட்டாரு... வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு முன்னாள் மனைவி முகத்தில் கரி பூசிய வனிதா...!

சுருக்கம்

வனிதாவுக்கும், பீட்டருக்கும் திருமணம் ஆன அடுத்த நாளே பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

வனிதாவுக்கும், பீட்டருக்கும் திருமணம் ஆன அடுத்த நாளே பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.பிரபல நடிகை வனிதா விஜய்குமாருக்கும் விஷ்வல் எடிட்டர் பீட்டர் பாலுக்கும் கடந்த 27ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. வனிதாவுக்கு இது மூன்றாவது திருமணமாகும், தனது இரண்டு மகள்கள் முன்னிலையில் பீட்டரை வனிதா கரம் பிடித்தார். 

இந்நிலையில் பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், எனக்கும் பீட்டருக்கும் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.நாங்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம்.என்னிடம் விவாகரத்து வாங்காமல் பீட்டர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் குறித்து வனிதா பேசுகையில், "இது எதிர்பார்த்த ஒன்று தான்.. பீட்டர் 8 ஆண்டுகளுக்கு முன்பே அவரை விட்டு பிரிந்துவிட்டார். மேலும் நாங்கள் திருமணம் செய்வது எலிசபெத்திற்கு தெரியும் என்றும் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை சட்ட ரீதியாக நாங்கள் சந்திக்க தயார் என்றும் தனது பாணியிலேயே பதிலடி கொடுத்துள்ளார். 

இதனிடையே ஆன்லைன் பேட்டி ஒன்றில் பேசியுள்ள பீட்டர் பாலின் முன்னாள் மனைவி, முறையாக விவாகரத்து செய்யாமல் பீட்டர் பால் விட்டுச்சென்றுவிட்டார். என் பிள்ளைகளுக்கும் எனக்கும் என்ன பதில். யூ-டியூப் சேனலை ரன் செய்ய வேண்டும் என்பதற்காக எனது கணவரை வீட்டிற்குள்ளேயே வைத்து வனிதா காரியம் சாதித்து கொண்டார். எனக்கு விவாகரத்து கொடுப்பதில் விருப்பம் இல்லை. 

பீட்டர் பால் ஒரு குடிகாரர், பெண்கள் விவகாரத்திலும் அடிக்கடி சிக்கிக் கொள்ளவார். என்ன இருந்தாலும் கணவர் என்பதால் அனைத்தையும் பொறுத்துக்கொண்டேன். எங்களை சேர்ந்தவர்கள் எல்லாரும் போன் செய்து விசாரிக்கின்றனர்,. என்ன உங்க கணவர் வேறு திருமணம் செய்து கொண்டாராமே? என விசாரிக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. எனக்கு எனது கணவருடன் சேர்ந்து வாழவே விருப்பம் என தெரிவித்துள்ளார். மேலும் பீட்டர் பாலுக்கு தற்போது வருமானம் ஏதுமில்லாததால், வனிதா போன்ற நடிகையுடன் செட்டில் ஆகிவிட்டால் அவர் சொல்லும் வேலையை செய்து கொண்டு காலம் தள்ள பிளான் போட்டுள்ளார். அதனால் தான் பீட்டர் பால் பத்தோட பதினொன்னாக வனிதாவை திருமணம் செய்துள்ளார் என கிழித்து தொங்கவிட்டார்.

இந்நிலையில், பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை ஆதாரமாக வைத்துள்ளார் வனிதா. இதில், ஆண்களை குறை செல்வதற்காக பெண்கள் விஷயத்திலும், குடி காரர் என்றும் கூறி வருகிறார்கள். உண்மையில் என் கணவர் அசைவ உணவை கூட சாப்பிட மாட்டார். இதற்கு ஆதாரமாக தன்னுடைய திருமண  கொண்டாட்டத்தின் போது, ஆல்கஹால் இல்லாத, மதுவை அவர் அருந்தும் வீடியோ வெளியிட்டு முதல் மனைவி எலிசபெத் முகத்தில் கரியை பூசியுள்ளார் வனிதா.

அந்த வீடியோ இதோ...

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Pandian Stores 2 : குமாருக்கு அரசியை பெண்கேட்டு சென்ற காந்திமதி... பாண்டியன் ஃபேமிலி கொடுத்த ட்விஸ்ட்
Siragadikka Aasai : மனோஜின் திருமணத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு... ரோகிணியை விஜயா திடீரென சந்தித்தது ஏன்?