தல அஜித்தின் விடாமுயற்சி.. Second Look.. 2 டக்கர் போஸ்டர்ஸ் வெளியிட்ட படக்குழு - Fans கொஞ்சம் Happy அண்ணாச்சி!

Ansgar R |  
Published : Jul 07, 2024, 09:36 PM IST
தல அஜித்தின் விடாமுயற்சி.. Second Look.. 2 டக்கர் போஸ்டர்ஸ் வெளியிட்ட படக்குழு - Fans கொஞ்சம் Happy அண்ணாச்சி!

சுருக்கம்

Vidaamuyarchi Second Look : தல அஜித் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி படத்தின் Second Look போஸ்டர்களை வெளியிட்டு அசத்தியுள்ளது லைகா தயாரிப்பு நிறுவனம்.

தல அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் குறித்த அப்டேட்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருவது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், தல அஜித் அவர்கள் முதல் முறையாக நடித்து வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. 

கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாகவே இந்த படத்தின் படபிடிப்பு பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அசர்பைஜான் என்ற நாட்டில் விறுவிறுப்பாக நடந்து வரும் விடாமுயற்சி படத்தின் படபிடிப்பு பணிகள் விரைவில் முடிவடைந்து, வருகின்ற தீபாவளி திருநாளுக்கு நிச்சயம் அப்படம் வெளியாகும் என்று பட குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சொட்ட சொட்ட நனைந்த "ஐசு".. நீச்சல் குளத்தில் சில்லுனு ஒரு குளியல் - வீக் எண்டு என்ஜாய் மோடில் பூமிகா சாவ்லா!

அதே நேரம் விடாமுயற்சி படத்தோடு இணைந்து, நடிகர் அஜித் அவர்கள், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் "குட் பேட் அக்லி" என்கின்ற திரைப்படத்தின் பணிகளையும் மாற்றி மாற்றி மேற்கொண்டுவருகின்றனர். பல ஆண்டுகள் கழித்து ஒரே சமயத்தில் இரு திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் அஜித், அவ்வப்போது தனது குடும்பப் பணிகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் விடாமுயற்சி படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் அப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. தற்பொழுது வெளியாகி உள்ள அந்த இரண்டு போஸ்டர்களும் தல ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கையில் துப்பாக்கியுடன் சோகமாக இருக்கும் தல அஜித் அவர்களின் லுக் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.   

குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி ஆகிய இரு படங்களிலும் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்து வருகின்றார் அஜித். Good Bad Ugly திரைப்படம் வருகின்ற 2025ம் ஆண்டு பொங்கலுக்கு தல பொங்கலாக வெளியாகவுள்ளது. 

சொட்ட சொட்ட நனைந்த "ஐசு".. நீச்சல் குளத்தில் சில்லுனு ஒரு குளியல் - வீக் எண்டு என்ஜாய் மோடில் பூமிகா சாவ்லா!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?