இப்படி ஆகும்னு நினைக்கல.. போயஸ் கார்டனில் கட்டிய வீடு குறித்து முதன் முறையாக மனம் திறந்த தனுஷ்!

Published : Jul 07, 2024, 02:14 PM IST
இப்படி ஆகும்னு நினைக்கல.. போயஸ் கார்டனில் கட்டிய வீடு குறித்து முதன் முறையாக மனம் திறந்த தனுஷ்!

சுருக்கம்

கடந்த ஆண்டு சென்னை போயஸ் கார்டனில் புதிதாக பிரம்மாண்டமாக வீடு கட்டி குடியேறினார் நடிகர் தனுஷ். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவுக்கு பிறகு ஏன் தனுஷ் போயஸ் கார்டன் வீட்டில் வசிக்கிறார் ? என்ற கேள்வி எழுந்தது. நடிகர் தனுஷ் அதற்கான பதிலை ராயன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.

தனுஷின் நீண்ட நாள் கனவு, தான் தன் பெற்றோர் மற்றும் மகன்களுடன் வசிக்கும் வகையில் வீடு கட்ட வேண்டும் என்பது தான். கடந்த ஆண்டு சென்னை போயஸ் கார்டனில் புதிய வீடு கட்டி குடியேறினார் நடிகர் தனுஷ். தனுஷ் மற்றும் அவரது பெற்றோரின் இல்லத்திருவிழாவின் புகைப்படங்கள் அப்போது வெளியானது. அதில், தனுஷ் நீல நிற பட்டு குர்தா மற்றும் வெள்ளை பைஜாமா அணிந்திருந்தார். அந்த வீட்டை அவர் தனது பெற்றோருக்கு பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது. 2021 இல், தனுஷும் அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவும் போயஸ் கார்டனில் உள்ள அவரது புதிய வீட்டிற்கு பூஜை செய்தனர்.

இதில் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதாவும் கலந்து கொண்டனர். இருப்பினும், 2022 இல், இருவரும் 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்ததுக்கு பிறகு பிரிந்து செல்ல முடிவு செய்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தனுஷின் புதிய வீடு கடந்த ஆண்டு நிறைவடைந்தது. அப்போது தனுஷ், அவரது பெற்றோர் மற்றும் அவரது உடன்பிறந்தோர்கள் கலந்து கொண்ட இல்ல விழா நடத்தப்பட்டது.  நடிகர் தனுஷின் போயஸ் கார்டன் வீடு புகைப்படங்கள் அப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

தற்போது ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் பிரிந்துள்ள நிலையில், ஏன் தனுஷ் போயஸ் கார்டன் வீட்டில் தங்கியிருக்கிறார்? என்ற கேள்வியும் எழுந்தது. நேற்று நடந்த ராயன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் இதற்கான பதிலை அளித்துள்ளார்.  நடிகர் தனுஷ் பேசிய போது, போயஸ் கார்டனில் நான் வீடு கட்டியது இவ்வளவு பெரிய சர்ச்சையாகும் என்று தெரிந்திருந்தால் நான் இந்த வீட்டை நிஜமாகவே கட்டியிருக்க மாட்டேன். நான் யாருடைய ரசிகன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

நான் ரஜினி சாரின் மிகப்பெரிய ரசிகன். ரஜினிகாந்த் சாரின் வீடு போயஸ் கார்டனில் இருக்கிறது. நான் என்னுடைய 16 வயதில் ரஜினி சாரின் வீட்டை பார்க்க வேண்டும் என்று நினைத்து ஒருவழியாக பார்த்தேன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடும் போயஸ் கார்டனில் தான் இருக்கிறது. இப்படிப்பட்ட போயஸ் கார்டனில் நானும் வீடு கட்ட வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்தது. அப்போது இருந்த 16 வயது வெங்கடேஷ் பிரபுவுக்கு இந்த தனுஷ் கொடுத்த பரிசு தான் போயஸ் கார்டனில் நான் கட்டிய வீடு.

நான் யார் என்று அந்த சிவனுக்குத் தெரியும். என் அம்மா அப்பாவிற்கு தெரியும். நான் யார் என்று என்னுடைய ரசிகர்களுக்கு தெரியும். எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும் என்று தனுஷ் பேசினார். தற்போது தனுஷ் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவுடன் குபேரா படத்தில் நடித்து வருகிறார். ராயன் படம் ஜூலை 26 வெளியாக உள்ளது.

மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. முயற்சி எடுத்த இயக்குனர் வெற்றிமாறன்.. தீயாய் பரவும் தகவல்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Music Story: யாருக்கும் தெரியாத 'கரகாட்டக்காரன்' அன்-டோல்ட் ஸ்டோரி.! 365 நாட்கள் சாதனைக்கு இதுதான் காரணமா?!
Pandian stores 2: பாக்கியத்தின் கொடூர முகம் இதுதான்! சென்னைக்கு சென்ற கூலிப்படை?