Raayan : வெள்ளை வேஷ்டி.. வெள்ளை சட்டை.. மாஸ் என்ட்ரி கொடுத்த தனுஷ் - கோலாகலமாக நடந்த "ராயன்" இசை வெளியீடு!

Ansgar R |  
Published : Jul 06, 2024, 11:19 PM IST
Raayan : வெள்ளை வேஷ்டி.. வெள்ளை சட்டை.. மாஸ் என்ட்ரி கொடுத்த தனுஷ் - கோலாகலமாக நடந்த "ராயன்" இசை வெளியீடு!

சுருக்கம்

Raayan Audio Launch : முன்னணி நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் அவரது ராயன் படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்களுடைய இளைய மகன் தான் பிரபல நடிகர் தனுஷ். தனது தந்தையின் இயக்கத்தில் வெளியான "துள்ளுவதோ இளமை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ச்சியாக பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த தனுஷ், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியில் இருக்கிறார் என்றால் அது மிகையல்ல. 

அதே நேரம் கோலிவுட் உலகை தாண்டி பாலிவுட், டோலிவுட் மற்றும் ஹாலிவுட் என்று மிகப்பெரிய உச்சங்களை தொடர்ந்து தொட்டு வருகிறார் தனுஷ். ஏற்கனவே பா. பாண்டி என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தனுஷ், தற்பொழுது மீண்டும் திரைப்படங்களை இயக்க தொடங்கி இருக்கிறார். 

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகை ஹினா கான் வெளியிட்ட புகைப்படம்.. நெட்டிசன்கள் ஆதரவு!

அவருடைய ஐம்பதாவது திரைப்படமான "ராயன்" திரைப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் எஸ்.ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுந்தீப் கிஷன்,  நடிகை வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 

இந்த திரைப்படத்தின் இசையமைப்பணிப்பு பணியை மேற்கொண்டது ஆஸ்கார் நாயகண் இசைப்புயல் ரகுமான் அவர்கள் தான். ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியான நிலையில், இன்று இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் இணையத்தில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகின்றது.

அதே நேரம் ராயன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் கோலாகலமான முறையில் இன்று நடைபெற்று முடிந்தது. தனுஷ் அவர்களுடைய தந்தை கஸ்தூரிராஜா, அண்ணன் செல்வராகவன், ரகுமான் மற்றும் பட குழுவினர்கள் பலரும் இது நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

ஆரம்பித்து வைத்த தல.. சிறப்பாய் செயல்படுத்தி மாஸ் காட்டும் மஞ்சு - சேரும் சகதியுமாய் வெளியிட்ட வைரல் பிக்ஸ்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?