
தல அஜித்திற்கு பைக் ரெய்டு எவ்வளவு பிடிக்கும் என சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது கிடையாது. தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வரும் அஜித், சின்ன கேப் கிடைத்ததால் சிம்லாவிற்கு பைக்கிலேயே ஜாலி ட்ரிப் கிளம்பியுள்ளார். நண்பர்களுடன் சேர்த்து பைக்கில் பயணம் செய்து வரும் அஜித் வாரணாசியில் உள்ள ரோட்டுக்கடை ஒன்றில் சாப்பிட்டுள்ளார். அந்த கடை உரிமையாளருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
தற்போது ஐதராபாத் ராமோஜி ராவ் ஸ்டூடியோவில் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், வலிமை படக்குழு புனே சென்றுள்ளது.இதற்கு முன்னதாக ஐதராபாத்தில் ஷூட்டிங் சென்று கொண்டிருந்த போது தல அஜித், அங்குள்ள ரோட்டுக்கடை ஒன்றில் பலமுறை இட்லி வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டு வந்துள்ளார். பெரும்பாலான இரவு நேரங்களில் அங்கு தான் உணவருந்தி வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த இட்லி கடை நடத்துபவரின் பிள்ளைகளின் படிப்பு செலவிற்காக அஜித் ரூ.1 லட்சம் நிதி உதவி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவருடைய ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரிய கூடாது என்ற கொள்கை கொண்டவர் தான் அஜித் என்றாலும், அவர் செய்யும் உதவிகளை கேள்விப்பட்டு அவருடைய ரசிகர்கள் மெய்சிலிர்த்து போகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.