சிவகார்த்திகேயனால் நிஜமான ஏழை மாணவியின் மருத்துவ கனவு..! நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய சஹானா!

By manimegalai aFirst Published Jan 20, 2021, 8:05 PM IST
Highlights

அரசுப் பள்ளியில் படித்து பிளஸ் டூவில் 524 மதிப்பெண் எடுத்த பேராவூரணி மாணவி சஹானா, மேற்படிப்பு படிக்க வழியில்லாமல் வறுமையில் தவித்து வந்த நிலையில், தற்போது அவரது கனவு நடிகர் சிவகார்திகேயனால் நிறைவேறியதற்கு, மாணவி சஹானா மனதார தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.
 

அரசுப் பள்ளியில் படித்து பிளஸ் டூவில் 524 மதிப்பெண் எடுத்த பேராவூரணி மாணவி சஹானா, மேற்படிப்பு படிக்க வழியில்லாமல் வறுமையில் தவித்து வந்த நிலையில், தற்போது அவரது கனவு நடிகர் சிவகார்திகேயனால் நிறைவேறியதற்கு, மாணவி சஹானா மனதார தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள பூக்கொல்லை என்ற கிராமத்தைச் சேர்ந்த சஹானா என்ற மாணவி பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தும், குடும்ப வறுமையால் காரணமாக சிறிய வயதில் இருந்தே தான் படிக்க நினைத்த டாக்டர் படிப்பை படிக்க முடியாமல் போய் விடுமோ என்கிற வருத்தத்தில் இருந்தார். இவர் குறித்த செய்தி வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டது.

இதை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், உடனடியாக ரசிகர்களை சஹானா வீட்டுக்கு அனுப்பி தேவையான உதவிகளை செய்ய சொன்னார். பின்னர் சஹானாவுடன் போனில் பேசிய சிவகார்த்திகேயன் நீ எதுக்கும் கவலைப்படாத. என்ன படிக்க வேண்டும் என நினைக்கிறாயோ அதில் கடைசி வரை உறுதியாக இரு. உன் படிப்புச் செலவு முழுவதையும் நான் பார்த்துக் கொள்கிறேன். மின்சார வசதி இல்லாமல், ஏழ்மையான நிலையிலும் நீ நல்ல மார்க் எடுத்திருக்க. உனக்கு வேண்டியதை நான் செய்கிறேன் என வாக்குறுதி கொடுத்தார்.

அதோடு நிறுத்தி விடாமல், சஹானா நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற, சென்னையில் கோச்சிங் கிளாஸ் சேர்த்து விட்டு, அவர் தங்குவதற்கு முதல் கொண்டு அணைத்து செலவுகளையும் செய்தார். மாணவி சஹானாவும், நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த இவருக்கு 
தமிழக அரசின் 7% உள் ஒதுக்கீட்டில் மருத்துவ சீட் கிடைத்துள்ளது. 

மின்சார வசதி கூட இல்லாத வீட்டில் படித்து, மருத்துவம் பயில போகும் சஹானா, இந்த இதற்க்கு முக்கிய காரணமான நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய நன்றிகளை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

click me!