#Breaking 98 வயதில் கொரோனாவை வென்ற... நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்..!

By manimegalai aFirst Published Jan 20, 2021, 7:23 PM IST
Highlights

98 வயதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர்  உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி அதில் இருந்து மீண்டு வந்த நிலையில், இன்று மாலை 6 மணியளவில் காலமாகி விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 

98 வயதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர்  உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி அதில் இருந்து மீண்டு வந்த நிலையில், இன்று மாலை 6 மணியளவில் காலமாகி விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் நடித்த  ’பம்மல் கே சம்பந்தம்’, படத்தில் கமல்ஹாசனின் தாத்தாவாக நடித்திருந்தவர், பிரபல மலையாள பட நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'சந்திரமுகி', அஜித் நடித்த 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' போன்ற பல படங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர்.

தற்போது 98 வயதாகும் இவர், சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், ஒருசில தினங்களுக்கு முன் உடல் பூரண குணமடைந்து விட்டதாக இவரது மகன் தெரிவித்திருந்தார்.

எனினும், வயது மூப்பு காரணமாக அவதி பட்டு வந்த இவர், இன்று மாலை 6  மணியளவில் பயன்னூர் கூட்டுறவு மருத்துவமனையில் காலமாகிவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 
தன்னுடைய 76 வயதில் திரையுலகில் அறிமுகமாகி, மலையாளம் மற்றும் தமிழில் நடித்து அனைவருக்கு பிடித்த நடிகராக மாறினார்.

இவருடைய மரணம் பற்றி அறிந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

click me!