நான் தோற்றுவிட்டேன்... விரக்தியின் உச்சத்தில் இயக்குனர் போட்ட பதிவு! மன்னிப்பு கேட்ட ரசிகர்..!

By manimegalai aFirst Published Jan 20, 2021, 11:09 AM IST
Highlights

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான, 'பூமி' படத்தின் இயக்குனர், இந்த படத்திற்கு ரசிகர் செய்த கமெண்டை பார்த்து விரக்தியின் உச்சத்தில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான, 'பூமி' படத்தின் இயக்குனர், இந்த படத்திற்கு ரசிகர் செய்த கமெண்டை பார்த்து விரக்தியின் உச்சத்தில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'ரோமியோ ஜூலியட்', 'போகன்' படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக இயக்குனர் லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருந்த திரைப்படம் பூமி. ஜெயம் ரவியின் 25வது படமான இதில் நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.  இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்திருந்தார் மே 1-ம் தேதி வெளியாக இருந்த இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போனது.

இதனிடையே பூமி திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில்  பொங்கல் அன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. விவசாயத்தின் அருமை பெருமைகளை விளக்கி கூறும் விதத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு தொடர்ந்து, கலவையான விமர்சனங்களே கிடைத்து வந்தது.

அதே நேரத்தில் விண்வெளி ஆராச்சி வீரர், ஒருவர் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு தனக்கு கிடைத்தும், நம் பூமியை காப்பாற்றும் விவசாயம் தான் முக்கியம் என, நாசா வேலையை கூட விட்டு வெளியேறும் காட்சிகள் கை தட்டல்களை அள்ளினாலும், பல விஷயங்கள் இந்த கதைக்கு எடுபடவில்லை என்பதே பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

இந்த நிலையில் 'பூமி' படம் பார்த்த ரசிகர் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், விமர்சித்திருந்தார். இதனை பார்த்து கொதித்தெழுந்த இயக்குனர் லட்சுமண், "சார். நம்ம எதிர்காலத் தலைமுறை நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்துதான் இந்தப் படம் எடுத்தேன். உங்களுக்காகத்தான் எடுத்தேன். ‘ரோமியோ ஜூலியட்’ எடுத்த எனக்கு கமர்ஷியல் தெரியாதா? நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும். சூப்பர் ப்ரோஜெயிச்சிட்டீங்க. நான் தோத்துட்டேன்" என்று விரக்தியுடன் பதிவு செய்திருந்தார்.

இவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் பலர், தொடர்ந்து இயக்குனர் லட்சுமணுக்கு ஆதரவாக ட்விட் செய்து வந்த நிலையில், பூமி படத்தை விமர்சித்த அந்த ரசிகர், தன்னுடைய வார்த்தை உங்களை கஷ்டப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்பதாக கூறி ட்விட் செய்துள்ளார். 

Sir na eduthathu entha padam pannanum Namma ellarum future generation nallaerrukanamnu nenaichen ungallukaga tha eduthen bro Romeo Juliet edutha ennaku comercial theriyadha nam nadum nattu makkalum nasamai pogattum bro nenga super bro you win I loose https://t.co/NXLFJGHIO7

— DIR.LAKSHMAN (@dirlakshman)

sir i apologize if i had hurted your feelings na innum padam paakala and neenga thappana tweet ah quote pannitinga i always used to give respect for everyone's work neenga saabam vidradhaala yaarukum edhuvum aaga poradhu illa make good movies like romeo Juliet people https://t.co/U0bRJL0ZNy

— Madhavan (@Mad_Strikes)

click me!