தல வார்த்தைக்கு தலைவணங்கிய ரசிகர்கள்... இன்றே வெளியானது பிறந்தநாள் காமென் டிபி... இதோ...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 26, 2020, 07:03 PM IST
தல வார்த்தைக்கு தலைவணங்கிய ரசிகர்கள்... இன்றே வெளியானது   பிறந்தநாள் காமென் டிபி... இதோ...!

சுருக்கம்

அஜித்தின் இந்த அதிரடி அறிவிப்பால் சற்றே அதிர்ச்சியில் இருந்த தல புள்ளிங்கோ, அவர் சொன்ன வார்த்தையை காப்பற்ற வேண்டும் என்பதற்காக காமென் டி.பி.யை இன்றே ரிலீஸ் செய்துவிட்டனர். 

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் மிகவும் முக்கியமான இடத்தில் இருக்கும் தல அஜித்திற்கு மே 1ம் தேதி பிறந்த நாள் வர உள்ளது. ரசிகர்கள் மன்றத்தை கலைத்துவிட்டாலும், தல அஜித் மீது பாசத்தை பொழியும்  ஃபேன்ஸ் கூட்டத்திற்கு சற்றும் குறைவில்லை. தனது சினிமா சம்பந்தமான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, எந்த சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டார் என்றாலும் அவரது ரசிகர்கள் மத்தியில் மவுசு குறையவில்லை. 


ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எந்தவிதமான சோசியல் மீடியாவிலும் அஜித்திற்கு கணக்கு கிடையாது. ஆனால் அவரைப் பற்றிய சின்ன தகவல்கள் கூட அவரது ரசிகர்கள் உலக அளவிற்கு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இப்படி அளவு கடந்த பாசம் வைத்துள்ள தல ரசிகர்கள் அவரது பிறந்த நாளை சும்மா விட்டுவிடுவார்களா என்ன?... மாஸ் காட்ட மரண வெயிட்டிங்கில் இருந்தனர்.

இதையும் படிங்க:  டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக தட்டித்தூக்க பக்கா பிளான்... பெண்களுக்கு “திரெளபதி” இயக்குநர் வைத்த கோரிக்கை...!

மே 1ம் தேதி அன்று தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, ஹன்சிகா, பிரியா ஆனந்த், பிரேம்ஜி, அருண் விஜய், ஆதவ் கண்ணதாசன், ரைசா, சாந்தனு உள்ளிட்ட 14 பிரபலங்களை கொண்டு ஸ்பெஷல் டி.பி. ஒன்றை வெளியிட அஜித் ரசிகர்கள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இந்த டி.பி.யை வெளியிடவிருந்த பிரபலங்கள் சிலருக்கு அஜித் அலுவலகத்தில் இருந்து போன் வந்துள்ளது. தற்போது கொரோனா பிரச்சனையால் மக்கள் எண்ணற்ற இன்னல்களை சந்தித்து வரும் இந்த நிலையில், தடபுடலான கொண்டாட்டங்களை தவிர்க்கும் படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: டாப் ஆங்கிளில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த யாஷிகா ஆனந்த்... படு பயங்கர ஓபனால் நிலைகுலைந்த நெட்டிசன்கள்...!

இதை தங்களது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்ட சாந்தனு, ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் அஜித்தின் வார்த்தைக்கு கட்டுப்படுவதாக தெரிவித்தனர். அஜித்தின் இந்த அதிரடி அறிவிப்பால் சற்றே அதிர்ச்சியில் இருந்த தல புள்ளிங்கோ, அவர் சொன்ன வார்த்தையை காப்பற்ற வேண்டும் என்பதற்காக காமென் டி.பி.யை இன்றே ரிலீஸ் செய்துவிட்டனர். சிம்பிள் அண்ட் க்யூட் டிசைனில் உள்ள அந்த டி.பி. சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. அத்துடன் #ThalaAJITHBdayGalaCDP என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. டி.பி.யை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே 1 மில்லியன் ட்விட்டுகளை கடந்து சாதனை படைத்து வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் கள்ளாகட்டிய டாப் 3 படங்கள் பட்டியல்: லேட்டஸ்ட் கோலிவுட் அப்டேட்!
2025ல் சாங்க்ஸில் பட்டைய கிளப்பிய டாப் 5 பாடல்கள்; ஓ இந்த பாடல் தான் டாப்பா?