அஜித் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்! வெளியானது தகவல்....

 
Published : Mar 12, 2018, 03:49 PM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
அஜித் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்! வெளியானது தகவல்....

சுருக்கம்

Thala Ajith and Boney Kapoor to join hands

அஜித் நடிக்கும் அடுத்த படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருக்கிறார். சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய வினோத் இந்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



அஜித், சிவா கூட்டணியில் உருவாக உள்ள அடுத்தப்படம் ‘விசுவாசம்’. அஜித் மற்றும் சிவா தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்திருக்கும் இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார்.  சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் டி.இமான் இசையமைகிறார். தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு என 3 நகைச்சுவை நடிகர்கள் தேர்வாகியுள்ளனர்.



’விசுவாசம்’ படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.  ‘சதுரங்க வேட்டை’,  ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய வினோத் தற்பொழுது அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா நடித்துள்ள ‘சதுரங்க வேட்டை 2’ படத்தின் கதையையும் எழுதியுள்ளார்.



அஜித் மற்றும் வினோத் இணையும் இந்த படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஸ்ரீதேவிக்கும் அஜித்துக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீதேவி கேட்டுக் கொண்டதற்காக ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் அஜித் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். சிவாவின் 'விசுவாசம்' படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் நடிக்க உள்ளார் அஜித்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கதற கதற அடிவாங்கிய கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!