16 ஆம் நாள் சடங்கு…. ஸ்ரீதேவியின் வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய தல!!

Asianet News Tamil  
Published : Mar 12, 2018, 01:45 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
16 ஆம் நாள் சடங்கு…. ஸ்ரீதேவியின் வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய தல!!

சுருக்கம்

sri devi death 16th day function ajith and shalini paid homage

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 16 ஆம் நாள் சடங்கு நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமார் தனது மனைவியுடன் சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி 16 வயதினிலே படத்திம் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். இதையடுத்து  ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த ஸ்ரீ தேவி, தனது உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக துபாய் சென்றிருந்தபோது  கடந்த மாதம் 24 ஆம் தேதி ஓட்டலில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார்.

 இதளையடுத்து பல கட்ட விசாரணைக்குப் பிறகு அம்பானியின் தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்பட்ட ஸ்ரீ தேவியின் உடல் முதலில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. பின்பு மும்பை செலிபிரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமா மற்றும் இந்திய சினிமாவில் பல திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில் நடிகை  ஸ்ரீதேவிக்கு 16ம் நாள் சடங்கு  சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் திரையுலகினர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எலெக்‌ஷன் அன்று நயன்தாரா படம் ரிலீஸ் ஆகாது... 'Patriot' பட ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு
ரஜினியை அடிக்கணுமா? எதுக்கு வம்புனு ஹீரோயின் வாய்ப்பை குஷ்பு தூக்கியெறிந்த படம் பற்றி தெரியுமா?