உண்மை ரகசியத்தை வெளியிட்ட ஆரவ்! அதிர்ச்சியில் ஓவியா மற்றும் ரசிகர்கள்!

 
Published : Mar 12, 2018, 02:27 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
உண்மை ரகசியத்தை வெளியிட்ட ஆரவ்! அதிர்ச்சியில் ஓவியா மற்றும் ரசிகர்கள்!

சுருக்கம்

Shock Oviya and Fans for Aarav released by Truth

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழின் முன்னணி பொழுதுபோக்கு தொலைக்காட்சியான விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்களில் ஒருவர் ஆரவ். அதில் பரிசு தொகையையும் வென்றார்.

இந்த நிகழ்ச்சியின் போது, பிக்பாஸ் வீட்டில் இருந்த ஓவியாவுக்கும், ஆரவுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஆரவ் ஓவியாவின் காதலை ஏற்க மறுத்தார். ஆரவ மீது இருந்த காதலால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

ஓவியாவை காதலிக்கவில்லை என்று ஆரவ் கூறியதால், அவரை மனதார விரும்பிய ஓவியா மன அழுத்தம் ஏற்பட்டு வெளியேறியதாக கூறப்பட்டது. இதை பின்னர் மறைமுகமாகவும் ஓவியா தனது காதலை தெரிவித்தார். பின்னர் ஓவியா சகஜமான நிலைக்கு திரும்பினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது. ஓவியா ஆர்மி என ரசிகர்கள் வ்பட்டம் பெருகியது. ஓவியாவின் சினிமா மார்க்கெட் சூடு பிடித்த நிலையில் பிரபல நிறுவனங்களின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் தேடி வந்தன. விளம்பர படங்களிலும் நடித்தார். இது போல் ஆரவுக்கும் தனி அடையாளமும், புதிய பட வாய்ப்புகளும் கிடைத்தன.

பழைய சம்பவத்தை மறந்து ஓவியாவும், ஆரவும் இப்போது சாதாரணமாக பழகுகிறார்கள். பேசிக் கொள்கிறார்கள். ஓவியாவை தனக்கு ஏன் பிடிக்கும் என்ற காரணத்தை கூறியுள்ள ஆரவ், “நாம் நாமாக இருப்பது தான் உலகத்திலேயே மிக கஷ்டமான வி‌ஷயம். ஏதோ ஒரு வகையில் பெரும்பாலான இடங்களில் நாம் நடித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் ஓவியா அப்படி இல்லாமல் எல்லா இடத்திலும் அவராகவே இருக்கிறார். அவரை எனக்கும், எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. ரசிகர்கள் அவருக்காக தனி படை உருவாக்கும் அளவுக்கு ஓவியா பெயர் பெற்றதற்கும் அது தான் காரணம்” என்று தெரிவித்துள்ளார். இதனால் ஓவியா மிகவும் ஆச்சர்யம் அடைந்துள்ளார். ரசிகர்கள் அதிர்ச்சியும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கதற கதற அடிவாங்கிய கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!