
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகையானா தாய்லாந்து இளவரசி ராஜ்தாஸ்ரீ ஜெயம்குரா இந்தியா வந்தார்.
பின் ரஜினியை சந்திக்க விரும்பிய இளவரசி, கலை புலி தாணுவின் மகன் பரந்தாமனை தொடர்பு கொண்டு தன் விருப்பத்தை கூறியுள்ளர்.
இதை தொடர்ந்து தாணுவின் மகன், இளவரசி ராஜ்தாஸ்ரீ ஜெயம்குரா ரஜினியை சந்திக்க ஏற்பாடுகளை செய்தாராம் .
ஏற்கனவே கபாலி படத்தின் படப்பிடிப்புகள் தாய்லாந்தில் நடைபெற்றபோது அதற்கு முழு ஒத்துழைப்பு தந்து உதவியவர் தாய்லாந்து இளவரசி என்பது குறிப்பிட தக்கது.
மேலும் கபாலி படத்தின் வெற்றி குறித்தும் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் அவர் விசாரித்த தாகவும், அதே போல் 2.0 படதிற்கும் மற்றும் மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பதற்கு வாழ்த்து கூறியதாகவும் சொல்ல படுகிறது.
இவர்களது சாந்துபு சுமார் 40 நிமிடம் நடந்ததாம், மேலும் அரசு விருந்தினராக வர வேண்டும் என அழைப்பும் ரஜினிக்கு விடுத்துள்ளாராம் தாய்லாந்து இளவரசி ராஜ்தாஸ்ரீ ஜெயம்குரா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.