சரிந்தது “பாகுபலி”யின் பிரம்மாண்ட சாம்ராஜ்யம்... காத்திருந்து வச்சி செஞ்ச தெலுங்கு சூப்பர் ஸ்டார்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Apr 4, 2020, 11:35 AM IST

வசூல் ரீதியாக இந்திய திரையுலகையே டோலிவுட்டை நோக்கி திரும்பி பார்க்க வைத்த இந்த படத்தின் மாபெரும் சாதனைகளில் ஒன்றை அசால்டாக பின்னுக்குத் தள்ளிவிட்டார் நம்ம தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு. 


எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் பிரபாஸ்,அனுஷ்கா,ரம்யா கிருஷ்ணன் என பல முன்னணி நட்சத்திரங்களின் வீர தீர நடிப்பில் வெளியாகிய பிரம்மாண்ட திரைப்படம் பாகுபலி. “பாகுபலி-1”, “பாகுபலி-2” என இரண்டு பாகங்களாக வெளியாகிய இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. வசூல் ரீதியாக இந்திய திரையுலகையே டோலிவுட்டை நோக்கி திரும்பி பார்க்க வைத்த இந்த படத்தின் மாபெரும் சாதனைகளில் ஒன்றை அசால்டாக பின்னுக்குத் தள்ளிவிட்டார் நம்ம தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு. 

Latest Videos

அனில் ரவிபுடி இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, லேடி சூப்பர் ஸ்டார் விஜய சாந்தி, டோலிவுட் கனவு கன்னி ராஷ்மிகா மந்தனா, நம்ம ‘செல்லம்’ பிரகாஷ் ராஜ் உட்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்த படம்  “சரிலேரு நீக்கெவரு”. ஜனவரி 11ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது.

இதையும் படிங்க: சிம்ரனுக்கு அடுத்து த்ரிஷா... குட்டை டவுசரில் கெட்ட ஆட்டம் போட்டு டிக்-டாக்...!

இந்த படத்துடன் வெளியான அல்லு அர்ஜூனின்  “அலா வைகுந்தபுரம்லோ” படத்தின் வசூல் கூட சற்றே தடுமாறியது என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட இந்த படத்தை உகாதி பண்டிகையை முன்னிட்டு, ஜெமினி தொலைக்காட்சியில் சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பியுள்ளனர். 

இந்த படத்தின் டி.ஆர்.பி. 23.4 என்ற அளவை எட்டியுள்ளது. இதற்கு முன்னதாக தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான  “பாகுபலி”  முதல் பாகம் 22.7-ம்,  “பாகுபலி” இரண்டாம் பாகம் 21.8 என்ற எண்னையும் மட்டுமே பெற்றிருந்த நிலையில், அந்த இரண்டு சாதனைகளையும் மகேஷ்பாபுவின் படம் பின்னுத்தள்ளியுள்ளது. 

இதையும் படிங்க: ச்சீ...இன்னம் என்ன கன்றாவி எல்லாம் பார்க்க வேண்டி வருமோ...ஊரடங்கில் இவங்க பண்ற அட்டகாசத்தை நீங்களே பாருங்க...!

இதை தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தாலும், ஊரடங்கு நேரத்தில் எல்லோரும் வீட்டில் இருப்பதால் தான் உங்க ஆள் படம் இப்படி எல்லாம் சாதனை புரிய முடிஞ்சது என பிரபாஸுன் ரசிகர்கள் நக்கல் செய்து வருகிறார்களாம். 

click me!