தயாரிப்பாளர் தில் ராஜுவின் தந்தை மறைவுக்கு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ராம் சரண்

Published : Oct 11, 2023, 09:47 AM IST
தயாரிப்பாளர் தில் ராஜுவின் தந்தை மறைவுக்கு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ராம் சரண்

சுருக்கம்

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் ராஜுவின் இல்லத்திற்கு நேரில் சென்று ஷ்யாம் சுந்தர் ரெட்டி மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் தந்தை ஸ்ரீ ஷ்யாம் சுந்தர் ரெட்டி அக்டோபர் 9ஆம் தேதி காலமானார். 80 வயதான அவர் வயது மூப்பு காரணமாக இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஞ்சலிக்காக ஹைதராபாத்தில் உள்ள தில் ராஜுவின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல் செவ்வாய் காலை 11 மணியளவில், தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் ராஜுவின் இல்லத்திற்கு நேரில் சென்று ஷ்யாம் சுந்தர் ரெட்டி மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். ராம் சரண் தில் ராஜுவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியபோது எடுத்த படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பகிரப்பட்டு வருகின்றன.

டோலிவுட்டில் மிகவும் செல்வாக்கு மிக்க தயாரிப்பாளர்களில் ஒருவர் தில் ராஜு. தெலுங்கு திரையுலகில் பல பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த முன்னணி தயாரிப்பாளராக உள்ளார். அக்டோபர் 9ஆம் தேதி, தில் ராஜுவின் தந்தை ஷ்யாம் சுந்தர் ரெட்டி தனது 80 வயதில் காலமானார்.

தில் ராஜுவின் தந்தை மறைவு பற்றிய செய்தி வெளியானவுடன், பிரபலங்களும் ரசிகர்களும் சமூக ஊடகங்களில் தங்கள் இரங்கல் செய்திகளைப் பகிர்ந்துகொண்டனர். இயக்குனர் கோபிசந்த் மலினேனி, "ஷ்யாம் சுந்தர் ரெட்டியின் மறைவு குறித்து கேள்விப்பட்டதற்கு வருந்துகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் #தில்ராஜு அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் விஜய் கனகமேடலா தனது இரங்கல் செய்தியில், "ஷ்யாம் சுந்தர் ரெட்டியின் மறைவு குறித்து கேள்விப்பட்டு வருந்துகிறேன். இந்த சங்கடமான நேரத்தில் தில்ராஜு அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!