லியோ பட டான்சர்களுக்கு சம்பளம் கொடுத்தாச்சு... பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு

Published : Oct 11, 2023, 09:08 AM IST
லியோ பட டான்சர்களுக்கு சம்பளம் கொடுத்தாச்சு...  பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு

சுருக்கம்

லியோ படத்தில் நடனமாடிய டான்சர்களுக்கு சம்பளம் முழுமையாக வழங்கப்பட்டுவிட்டதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் நா ரெடி தான் வரவா என்கிற குத்து பாடல் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை பிரம்மாண்டமாக படமாக்கி உள்ள படக்குழு இதில் விஜய் உடன் 2 ஆயிரம் நடனக் கலைஞர்களையும் ஆட வைத்துள்ளது. இப்பாடல் காட்சியின் படப்பிடிப்பு முடிந்து கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் அதில் விஜய்யுடன் நடனமாடிய நடனக் கலைஞர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது.

லியோ பட ரிலீஸ் நெருங்கி வரும் வேளையில் நடனக் கலைஞர்கள் இது தொடர்பாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். இருப்பினும் படக்குழு தரப்பில் முறையான விளக்கம் அளிக்காததால் நேற்று லியோ பட தயாரிப்பாளர் லலித் குமாரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட நடனக்கலைஞர்கள் அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில், லியோ படத்தில் நடனமாடிய நடனக் கலைஞர் அனைவருக்கு சம்பளம் முழுமையாக வழங்கப்பட்டுவிட்டதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். நடனக் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு சங்கத்தின் மூலமாகவும், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கு மூலமாகவும் சம்பளம் வழங்கப்பட்டுவிட்டதாக ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

சங்கத்தின் உறுப்பினர் அல்லாத 1,400 பேருக்கு 6 நாட்கள் பணிபுரிந்ததற்காக தலா ரூ.10 ஆயிரத்து 400 சம்பளமாக வழங்கப்பட்டதாகவும், நடனக் கலைஞர்களுக்கு சம்பளம் தரவில்லை என வெளியான செய்தி தவறானது என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறி இருக்கிறார். 

இதையும் படியுங்கள்...இன்னும் ஒருநாள் சம்பளம் கூட தரவில்லை.. லலித் சார் எங்கே..? தொடரும் லியோ பட டான்சர்களின் ஊதிய பிரச்சனை!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!