
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் எந்திரன், நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. இதையடுத்து ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தார். இதையடுத்து நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்ததன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார் அட்லீ.
தற்போது இவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் இந்தி படத்தை இயக்கி வருகிறார். குறுகிய காலத்தில் இயக்குனர் அட்லீ அசுர வளர்ச்சி கண்டாலும், அவர் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.
இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் வேறொரு படத்தின் சாயலில் தான் இருக்கும் என்கிற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு ராஜா ராணி படம் மெளன ராகம் படத்தின் காப்பி என்றும், தெறி படம் சத்ரியன் பட சாயலில் இருப்பதாகவும், மெர்சல் திரைப்படம் கமலின் அபூர்வ சகோதரர்கள் பட சாயலில் இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டன.
இந்நிலையில் இயக்குனர் அட்லீயை பிரபல இயக்குனர் ஒருவர் ட்ரோல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் சி.எஸ்.அமுதன், இவர் சமீபத்தில் டுவிட்டர் வாயிலாக ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், உங்கள பொறுத்த வரைக்கும் தமிழ்ல சரியா ரீமேக் செய்யப்பட்ட படம் எது என கேள்வி எழுப்பினார். இதற்கு மெர்சல் என பதிலளித்துள்ளார் அமுதன். இதன்மூலம் அவர் இயக்குனர் அட்லீயை மறைமுகமாக கலாய்த்துள்ளார்.
இதையும் படியுங்கள்... Iswarya menon : சிக்கென இருக்கும் உடலை... இஷ்டத்துக்கு காட்டி இம்சிக்கும் ஐஸ்வர்யா மேனனின் கிக்கான போட்டோஸ்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.