Nayanthara: வருங்கால மாமியாருக்கு ஐஸ் வைத்த நயன்தாரா..என்ன செய்தார் தெரியுமா..? வெளியான வைரல் போட்டோ ...

Anija Kannan   | Asianet News
Published : May 09, 2022, 09:53 AM IST
Nayanthara: வருங்கால மாமியாருக்கு ஐஸ் வைத்த நயன்தாரா..என்ன செய்தார் தெரியுமா..? வெளியான வைரல் போட்டோ ...

சுருக்கம்

Nayanthara: நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும், கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக இளம் காதல் ஜோடிகளாக  ''லிவிங் டூ கெதர்'' வாழ்கை முறை வாழ்ந்து வருகின்றனர்.

மிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நயன்தாரா.

கடந்த 2004-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர, சந்திரமுகி, கஜினி, சிவகாசி என குறுகிய காலத்திலேயே ரஜினி, சூர்யா, விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம்:

 சுமார் 20 ஆண்டுகளாக சினிமா கெரியர் சக்சஸ்புல்லாக அமைந்த நயன்தாராவிற்கு சமீபத்தில் வெளிவந்த  காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் சூப்பர்ஹிட்டாகியுள்ளது. இந்த படத்தை அவரின் வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். சமந்தாவும் இந்த படத்தில் கதிஜா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. 

நயன்தாரா , விக்னேஷ் சிவன் திருமணம்:

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, கடந்தாண்டு நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில், நயன்தாரா , விக்னேஷ் சிவன் இருவரும் வருகிற ஜூன் 19ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள போவதாக ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இவர்களது திருமணம் திருப்பதியில் நடைபெற உள்ளதாம். அதற்கான ஏற்பாடுகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளதாம். 

மாமியாருக்கு நயன்தாரா கொடுத்த முத்தம்: 

இந்நிலையில், தற்போதைய புதிய செய்தி என்னவென்றால், அன்னையர் தினம் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டதால், விக்னேஷ் சிவன் தனது தாயுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க...Sridevi: அன்னையர் தினத்தில் ஸ்ரீதேவியை நினைவு கூர்ந்த ஜான்வி கபூர்! சிறு வயது போட்டோவுடன் நெகிழ்ச்சி பதிவு

இதில், நடிகை நயன்தாரா தனது வருங்கால மாமியாருருடன் முத்தம் கொடுத்துள்ள அழகிய புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் பார்த்த நெட்டிசன்கள் திருமணத்திற்கு முன்பே,  நயன்தாரா, மாமியாரை கைக்குள் போட்டுவிட்டதாக கமெண்டுகள் பதிவு செய்து வருகின்றனர்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!